Published:Updated:

திருவள்ளூர்: குழந்தைகளைப் பிரிந்து சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! - தலைமறைவான இளைஞருக்கு வலை

மரணம்

திருவள்ளூரில் கணவன், குழந்தைகளைப் பிரிந்து சென்ற இளம்பெண், அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர்: குழந்தைகளைப் பிரிந்து சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! - தலைமறைவான இளைஞருக்கு வலை

திருவள்ளூரில் கணவன், குழந்தைகளைப் பிரிந்து சென்ற இளம்பெண், அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Published:Updated:
மரணம்

திருவள்ளூர் மாவட்டம், புதிய எருமைவெட்டிப் பாளையத்தைச் சேர்ந்தவர் பாபு. இவர் திருவள்ளூர் டவுன் காவல் நிலையத்தில் கொடுத்தப் புகாரில், ``பெரியகுப்பம், கம்பர் தெருவில் உள்ள வீட்டில் என்னுடைய மனைவி அமுதா, அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். மேலும் என்னுடைய மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் அமுதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சடலம்
சடலம்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``பாபுவுக்கும் அவரின் மனைவி அமுதாவுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அமுதாவுக்கும் புதிய எருமைவெட்டி பாளையத்தைச் சேர்ந்த ஜோதீஸ்வரன் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அதனால், அமுதா கணவன், குழந்தைகளைப் பிரிந்து, வீட்டை விட்டுச் சென்றுள்ளார். ஜோதீஸ்வரனுடன் அமுதா தங்கியிருந்த தகவல் கிடைத்ததும் அமுதாவை சமதானப்படுத்தி குடும்பத்தினர் பாபுவுடன் சேர்த்து வைத்தனர். அதன்பிறகும் அமுதா, வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிட்டார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாபுவின் நண்பர் சிவபிரகாசம், அமுதாவை புழல் பகுதியில் ஏதேச்சையாகச் சந்தித்துள்ளார். அப்போது அமுதா, தன்னை ஜோதீஸ்வரன் ஏமாற்றிவிட்டார். அதனால் மனஉளைச்சலில் இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த நிலையில்தான், அமுதா பெரியகுப்பத்தில் உள்ள வீட்டுக்குள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அமுதாவுடன் தங்கியிருந்த ஜோதீஸ்வரனைக் காணவில்லை. அவரிடம் விசாரித்தால்தான் அமுதாவின் மரணத்துக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.