Published:Updated:

``சர்ச் வாசலில் தலை; ஏரிக்கரையில் உடல்" சட்டக்கல்லூரி மாணவன் கொலை!

கொலை
கொலை

சென்னையில் தாம்பரம் அருகே உள்ள எருமையூர் பகுதியில் சர்ச் வாசலில் சட்டக்கல்லூரி மாணவனின் தலையும் ஏரிக்கரையும் உடலும் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள எருமையூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் வாசலில் மனித தலை ஒன்று கிடப்பதாகச் சோமங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது. உடனடியாக போலீஸார் அங்குசென்று மனிதத் தலையைக் கைப்பற்றினர். ஆனால் உடலைக் காணவில்லை. அதனால் அது யாருடைய தலை என்று தெரியவில்லை.

கொலை
கொலை

தலையில்லாத சடலம் ஒன்று எருமையூர் சித்தேரி பகுதியில் உள்ள ஏரிக்கரையில் கிடப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார் அதையும் கைப்பற்றினர். இரண்டையும் சேர்த்தபோது அது, எருமையூர் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவருடையது என்று அடையாளம் தெரிந்தது. வெற்றிவேலுக்கு 23 வயதாகுகிறது. இவர் சட்டக்கல்லூரி படித்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கல்லூரி மாணவர் ஒருவர் இந்தப்பகுதியில் கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிக்குப்பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.

இன்னொரு சம்பவம்:

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர்மீது தமிழகம், புதுச்சேரியில் உள்ள காவல் நிலையங்களில் கொலை , கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. புதுச்சேரி சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரமேஷ், செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கம் பகுதியில் உள்ள மீனவக் குப்பத்தில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்ற ரமேஷ், கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சூனாம்பேடு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கொலை
கொலை
சென்னை: மதுபோதையில் தந்தையைக் கொலை செய்த மகன்! - தாய் கொடுத்த புகாரில் கைது

ரஞ்சித்குமார் என்ற இளைஞர் இன்று காலை கொலை செய்யப்பட்டார். அவரின் தலையைக் கொலையாளிகள் தனியாகத் துண்டித்து வீசி விட்டுச் சென்றனர். இதுகுறித்து சூனாம்பேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர். ரமேஷ் கொலைக்குப் பழிவாங்க ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு