Published:Updated:

பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்: கான்ஸ்டபிள் மகன் கிரிமினல்களின் தலைவனான கதை | மினித் தொடர் 5

பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்

பஞ்சாப் பாடகர் படுகொலையில் கைதுசெய்யப்பட்டிருக்கும் லாரன்ஸ் பிஸ்னோய் சிறையில் இருந்துகொண்டு 700 பேர்கொண்ட கும்பலை வழிநடத்திவருகிறார்.

பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்: கான்ஸ்டபிள் மகன் கிரிமினல்களின் தலைவனான கதை | மினித் தொடர் 5

பஞ்சாப் பாடகர் படுகொலையில் கைதுசெய்யப்பட்டிருக்கும் லாரன்ஸ் பிஸ்னோய் சிறையில் இருந்துகொண்டு 700 பேர்கொண்ட கும்பலை வழிநடத்திவருகிறார்.

Published:Updated:
பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்
பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்: நள்ளிரவில் முடிவுக்குவந்த `விக்கி’யின் கதை | மினி தொடர் - 4

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா படுகொலையில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் லாரன்ஸ் பிஸ்னோய் பாகிஸ்தான் அருகிலுள்ள பஞ்சாப் பெரோஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கான்ஸ்டபிள் மகனாகப் பிறந்த லாரன்ஸ், படிக்கும்போது தடகள வீரராக வர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கும்போது முதன்முறையாக 2008-ம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலின்போது தனது நண்பர் கோல்டி பிரரின் எதிரணி வேட்பாளரை லாரன்ஸ் துப்பாக்கியால் சுட்டார். இதற்காகக் கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டு இரண்டு மாதங்கள் சிறையில் இருந்தார்.

சிறையில் இருந்தபோது ரஞ்சித் என்ற ஆயுத வியாபாரியின் தொடர்பு ஏற்பட்டது. தற்போது வரை ரஞ்சித்தான் லாரன்ஸ் பிஸ்னோயிக்கு தேவையான ஆயுதங்களை சப்ளை செய்துவருகிறார். கல்லூரி மாணவரணித் தேர்தலில் லாரன்ஸ் நண்பர் கோல்டி பிரர் ஆதரவாளர்கள் தோல்வியடைந்ததால் கோபத்தில் வெற்றிபெற்றவரின் சகோதரரைத் துப்பாக்கியால் சுட்டு மீண்டும் சிறைக்குச் சென்ற லாரன்ஸ், 2012-ம் ஆண்டு பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லாரன்ஸ்
லாரன்ஸ்

பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேறினாலும் தனது ஆதரவு வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதில் லாரன்ஸ் உறுதியாக இருந்தார். தொடர்ந்து லாரன்ஸ், பல்கலைக்கழகத்தின் மாணவரணியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 2014-ம் ஆண்டு லாரன்ஸ் தனது நண்பர் கோல்டி பிரருடன் சேர்ந்துகொண்டு லூதியானா மாநகராட்சித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரின் உறவினரைச் சுட்டுக் கொலைசெய்தார். இதனால் கைதுசெய்யப்பட்ட லாரன்ஸ் 2015-ம் ஆண்டு விசாரணைக்காக நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்ட போது கூட்டாளிகள் எட்டுப் பேர் சேர்ந்து லாரன்ஸ் தப்பிச்செல்ல உதவினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2015-ம் ஆண்டு, ஜனவரி மாதம் தப்பிய லாரன்ஸ் மார்ச் மாதம் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். சிறையில் இருந்துகொண்டே மிரட்டிப் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டதோடு, சிறையில் தன்னுடைய நண்பர்கள் வட்டாரத்தையும் அதிகரித்தார். சிறையில் இருந்துகொண்டு விளையாட்டு வீரர்கள், பாடகர்களை மிரட்டி தனது அடியாட்கள் மூலம் பணம் வசூலிக்க ஆரம்பித்தார். 2019-ம் ஆண்டு ரியல் எஸ்டேட் உரிமையாளர் சோனுஷா என்பவரை லாரன்ஸ் ஆட்கள் சுட்டுக் கொலைசெய்தனர். இதையடுத்து பரத்பூர் சிறையில் சோதனை நடத்தியதில் லாரன்ஸ் மொபைல்போன் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, லாரன்ஸ் டெல்லி சிறைக்கு மாற்றப்பட்டார்.

லாரன்ஸ்
லாரன்ஸ்

பின்னர் மகாராஷ்டிரா ஒருங்கிணைந்த குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு திகார் சிறைக்கு மாற்றப்பட்டார். திகார் சிறையில் இருந்தபோது தன் ஆட்களுக்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிப்பதில் திறம்படச் செயல்பட்டார். கனடா, அர்மெனியா உட்பட வெளிநாடுகளுக்குக்கூட போன் செய்து தன் ஆட்களை இயக்கிவந்தார். லாரன்ஸ் கூட்டத்தில் தற்போது பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசங்களில் 700 பேர் வேலைசெய்கின்றனர். இவர்களில் பலர் குறிபார்த்துச் சுடுவதில் வல்லவர்கள்.

ராஜஸ்தானில் சில கிரிமினல்கள் படுகொலை செய்யப்பட்டபோது அவர்களின் கூட்டாளிகளைத் தனது அணியில் சேர்த்துக்கொண்டு ராஜஸ்தானில் தனது எல்லையை விரிவுபடுத்தினார். அதோடு பிஸ்னோய் இன மக்களின் ஆதரவும் இருந்தது. எனவேதான் பிஸ்னோய் இன மக்கள் புனிதமாகக் கருதும் அபூர்வ மான்களை வேட்டையாடியதற்காக நடிகர் சல்மான் கானுக்கு 2018-ம் ஆண்டு சிறைக்கு வெளியில் கொலை மிரட்டல் விடுத்தார். கடந்த ஆண்டு அகாலி தளம் தலைவர்களில் ஒருவரான விக்கி என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலையில் பாடகர் சித்து மூஸ் வாலாவின் மேலாளர் சகன் பிரீத் சிங்குக்குத் தொடர்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. சகன் பிரீத் தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். அவர் இந்தியாவிலிருந்து தப்பிச் செல்ல பாடகர் சித்துதான் உதவி செய்ததாக லாரன்ஸ் தெரிவித்திருக்கிறார். அதனால்தான் சித்து கொலை செய்யப்பட்டதாக கனடாவில் இருக்கும் கோல்டி பிரர் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறா. 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் லாரன்ஸ் மீது இருக்கின்றன. அவரை பஞ்சாப் போலீஸார் மிகவும் போராடித் தங்களது காவலில் எடுத்திருக்கின்றனர். தற்போது அவர் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதிலும், எதிரிகளின் கையால் கொலை செய்யப்பட்டுவிடக் கூடாது என்பதிலும் பஞ்சாப் போலீஸார் தீவிரமாக இருக்கின்றனர். அடுத்த பாகத்தில் சித்துவின் நண்பர் கோல்டி பிரர் பற்றிப் பார்க்கலாம்..!