Published:Updated:

திருச்சி: சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்த தந்தை - மகள் கண்முன்னே வெட்டிக் கொல்லப்பட்ட கொடூரம்!

கொலை
கொலை

திருச்சியில் வழக்கறிஞர் கோபி கண்ணன் என்பவர் தன் மகள் கண்முன்னே வெட்டிக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தபோது மகளின் கண்முன்னே தந்தை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆறுபேர் கொண்ட மர்மக் கும்பல் அவரை வெட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இந்தக் கொலை, பழிக்குப் பழியாக நடந்துள்ளதாகச் சந்தேகப்படுகிறார்கள் போலீஸார்.

வழக்கறிஞர் கோபிகண்ணன்
வழக்கறிஞர் கோபிகண்ணன்

திருச்சி பாலக்கரை கீழக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் கோபி கண்ணன். திருச்சியில் வழக்கறிஞராகப் பணியாற்றிவருகிறார். திருச்சி பீமநகர் பகுதியில் அவருடைய மாமனார் வீட்டில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவரின் மனைவி கோதேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், நேற்று மாலை தனது வீட்டின் அருகே மகளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்துகொண்டிருந்தபோது, திடீரென ஆறு பேர்கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கோபி கண்ணனை, அவரது மகள் கண்முன்னே சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. துடிதுடித்த கோபி கண்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

இந்தப் படுகொலை குறித்து கன்டோன்மென்ட் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆணையர் மணிகண்டன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி, உடலைப் பிரேத பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.

உறவினர்கள் போராட்டம்
உறவினர்கள் போராட்டம்

இதற்கிடையில் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களில் காட்சிப் பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது கோபி கண்ணன் கொலை செய்யப்பட்ட காட்சி ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதில், ஆறு பேர் கொண்ட கும்பல் கோபி கண்ணனைச் சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டுகின்றனர். இருவர் டூவீலரில் உட்கார்ந்திருக்கின்றனர். அவர்கள் வெட்டியதும் சர்வசாதாரணமாக எந்தச் சலனமும் இன்றி வண்டியில் ஏறித் தப்பித்துச் செல்கின்றார்கள். அவர்கள் வெட்டும் காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதறவைக்கிறது

என்ன நடந்து என்று வழக்கை விசாரித்துவரும் காவலர்களிடம் பேசினோம். ``கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு. கீழ புதூரைச் சேர்ந்த ஹேமந்த்குமார் என்கிற இளைஞரை அரியமங்கலத்திலுள்ள தோப்பு ஒன்றில் குடிபோதையிலிருந்தபோது மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.

புதுக்கோட்டை: இடையூறாக இருந்த மனைவி கொலை; மகளுக்கு பாலியல் தொல்லை! -  கொடூர தந்தைக்கு மரண தண்டனை

அந்தப் படுகொலையில் வழக்கறிஞர் கோபி கண்ணனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தகவல் வருகிறது. அதைத் தொடர்ந்து கோபி கண்ணன் மறைமுகமாக அட்ராசிட்டி மற்றும் ரௌடியிசம் செய்திருக்கிறார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரோ அவரைக் கொன்றிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். இப்போதுதான் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறோம். விசாரணை முடிந்ததும் நாங்களே பேசுகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு