Published:Updated:

2014-ல் நடந்த சம்பவம்... காதலியின் தம்பியைக் கொலைசெய்த காதலனுக்கு ஆயுள் தண்டனை!

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள்

காதலுக்குத் தடையாக இருந்த காதலியின் தம்பியைக் கொலைசெய்த காதலன் உட்பட மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அணைக்கரை காந்தி நகரைச் சேர்ந்தவர் வீரணன். இவருக்கு 17 வயது மகனும் உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகளும் உள்ளனர். உமாவை அப்பகுதியைச் சேர்ந்த ஜோன் (வயது 20) என்பவர் காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த அவரின் சகோதரர், ஜோனை கடுமையாக எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காதலுக்குத் தடையாக இருந்த உமாவின் சகோதரனை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த ஜோன், அதற்காக பல நாள்கள் திட்டம் தீட்டியுள்ளார்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள்
`லோனை நான் கட்டிக்கிறேன்; ஆயிரம் ரூபாய் வாங்கிக்கங்க!’ - தேனி பழங்குடியினப் பெண்களை அதிரவைத்த மோசடி

2014-ம் ஆண்டு தன் நண்பர்கள் வினிஷ் மற்றும் சந்தோஷ் ஆகியோரை அழைத்துக்கொண்டு அவரைக் கடத்தியுள்ளார் ஜோன். வாயில் பெவிக்கால் பசையை ஊற்றி, துணியால் கட்டி மேற்குத்தொடர்ச்சி மலை உச்சியில் இருந்து ராஜேஷ் கண்ணனை கீழே தள்ளி கொலை செய்தனர். சில நாள்களுக்குப் பின்னர், அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அந்த இடம் தமிழகப் பகுதி என்பதால், தேனி மாவட்டம் குமுளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவந்தனர். தொடர்ந்து ஜோன் மற்றும் அவரின் நண்பர்கள் வினிஷ், சந்தோஷ் ஆகியோரை கைது செய்தது காவல்துறை.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள்

வழக்கான தேனி மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி அப்துல் காதர். உமாவின் சகோதரனை கொலை செய்த குற்றத்துக்காக மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையைக் கட்டவில்லை என்றால், மூன்று பேரும் தலா ஒரு ஆண்டு கடும் காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

`சிறுமிக்கு நேர்ந்த துயரம்' - தேனி இளைஞருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை #TamilnaduCrimeDiary
பின் செல்ல