Published:Updated:

ராமநாதபுரத்தை அதிரவைத்த மின்வாரிய அதிகாரி கொலை; 80 வயது முதியவர் உட்பட எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை!

கொலை

ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி கழுத்து அறுத்துக் கொலைசெய்யப்பட்ட வழக்கில், 80 வயது முதியவர் உட்பட எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ராமநாதபுரம், ஓம் சக்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவர் வழுத்தூர் மின்நிலையத்தில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இந்த நிலையில், 2015-ம் ஆண்டு, ஜூலை 12-ம் தேதி தமிழரசன் தனது ஊரான மாடக்கொட்டானுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்துக்குப் பின்புறமுள்ள சேதுபதி நகர், வடக்கு நான்காவது தெரு வழியாக வந்தபோது, மர்ம நபர்கள் சிலர் அவரைப் பின்பக்கமாக கீழே தள்ளி, கத்தியால் கழுத்தை அறுத்தும், உடலை அரிவாளால் வெட்டியும் கொடூரமாகக் கொலைசெய்தனர். ராமநாதபுரத்தை அதிரவைத்த இந்தக் கொலைச் சம்பவம் குறித்து கேணிக்கரை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

அதில், கொலைச் சம்பவமொன்றில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கோபால் என்பவர், தன் மகன்களை வைத்து, தமிழரசனைக் கொலைசெய்தது தெரியவந்தது.

கொலைசெய்யப்பட்ட மின்வாரிய அதிகாரி தமிழரசன்
கொலைசெய்யப்பட்ட மின்வாரிய அதிகாரி தமிழரசன்

இதைத் தொடர்ந்து கோபால் (81), அவரின் மகன்கள் மாதவன் மகேஷ்‌ (34), பாலயோகேஷ்(32), இவர்கள் நண்பர்களான செல்வம், சீனிவாசன், முத்துராஜா, விஜயகுமார், கோபி ஆகிய எட்டு பேரைக் கைதுசெய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. ஏழாண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கு விசாரணையில் கைதுசெய்யப்பட்ட எட்டு பேரும் குற்றவாளிகள் என நீதிபதி விஜயா அறிவித்தார்.

இதில் கொலைசெய்த கோபாலின் மகன்கள் மாதவன் மகேஷ், செல்வம் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் மற்றும் 20 ரூபாய் ஆயிரம் அபராதமும், கொலைக்கு உடந்தையாக இருந்த கோபால் உள்ளிட்ட ஆறு பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.