Published:Updated:

`நீட் விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை கொடுத்த லிஸ்ட்!' - அடுத்தகட்ட விசாரணையில் சி.பி.சி.ஐ.டி

தேசிய தேர்வு முகமை கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் பிரியங்காவைக் கைது செய்ய முடிந்தது என சி.பி.சி.ஐ.டி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Theni CBCID Office
Theni CBCID Office

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் படித்த குற்றத்துக்காகவும் அதனோடு தொடர்புடைய குற்றத்துக்காகவும் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். விசாரணை தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையிடம் தகவல்களைக் கேட்டிருந்தது சி.பி.சி.ஐ.டி. அதன் அடிப்படையில் லிஸ்ட் ஒன்றைக் கொடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Theni CBCID Office
Theni CBCID Office
நீட் விவகாரம்: `கதறி அழுத மருத்துவ மாணவி!' - பூட்டப்பட்ட சி.பி.சி.ஐ.டி அலுவலத்தில் விசாரணை

சமீபத்தில் சென்னை சவீதா மருத்துவக் கல்லூரி மாணவி பிரியங்கா மற்றும் அவரின் தாயார் மைனாவதி ஆகியோர் கைது செய்யப்பட்டு தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

Priyanka
Priyanka

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல புதிய தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், தேசிய தேர்வு முகமை கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் பிரியங்காவை கைது செய்ய முடிந்தது என சி.பி.சி.ஐ.டி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ``நீட் விவகாரத்தில் உதித்சூர்யா மற்றும் வெங்கடேசனிடம் விசாரணை செய்தபோது, தேசிய தேர்வு முகமையின் உதவி அவசியம் தேவை எனப் புரிந்தது. அதன் அடிப்படையில், ஒரே முகவரி, பெயரில் யார் யாரெல்லாம் நீட் தேர்வெழுதினார்கள் என்ற தகவல் வேண்டும் எனக் கடிதம் எழுதினோம். அவர்கள் முழுமையாக ஆய்வுசெய்து, 50-க்கும் மேற்பட்டவர்களின் தகவல்களைக் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் பிரியங்கா.

Priyanka and his Mother
Priyanka and his Mother

அந்த லிஸ்ட்டில் இரட்டையர்களும் உள்ளனர். மேலும், உடனே அனைவரையும் கைது செய்துவிட முடியாது. முழுமையாக விசாரித்து தகவல்களைச் சேகரித்து கைது செய்யக்கூடிய முகாந்திரம் இருந்தால் மட்டுமே கைது என்பது சாத்தியம். லிஸ்ட்டில் உள்ளவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், ஆங்காங்கு உள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணையில் இருக்கிறார்கள்” என்றார்.