Published:Updated:

20 வருடங்கள்; பல்வேறு பாலியல் குற்றங்கள்... 12 பெண்களை வீட்டில் அடிமைகளாக வைத்திருந்த காவல் அதிகாரி

காவல் அதிகாரி டேவிட் கேரிக் ( ட்விட்டர் )

48 வயதான டேவிட் கேரிக் `அடிமைகள்' என்று முத்திரை குத்தி 12 பெண்களை யாருக்கும் தெரியாமல் தன் வீட்டில் வைத்திருந்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

20 வருடங்கள்; பல்வேறு பாலியல் குற்றங்கள்... 12 பெண்களை வீட்டில் அடிமைகளாக வைத்திருந்த காவல் அதிகாரி

48 வயதான டேவிட் கேரிக் `அடிமைகள்' என்று முத்திரை குத்தி 12 பெண்களை யாருக்கும் தெரியாமல் தன் வீட்டில் வைத்திருந்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

Published:Updated:
காவல் அதிகாரி டேவிட் கேரிக் ( ட்விட்டர் )

இங்கிலாந்தில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, 20 ஆண்டுகளாக 80-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்களை செய்ததாக ஒப்புக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

2003 - 2020-க்கு இடையில், டேவிட் கேரிக் என்ற காவல்துறை அதிகாரி மீது ​​குறைந்தபட்சம் 12 பெண்களுக்கு எதிராக 24 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் செய்ததாக சக காவல்துறை அதிகாரிகளால் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்துவந்தநிலையில், டேவிட் கேரிக் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியாகியிருக்கிறது. 48 வயதான டேவிட் கேரிக் `அடிமைகள்' என்று முத்திரை குத்தி 12 பெண்களை யாருக்கும் தெரியாமல் தன் வீட்டில் வைத்திருந்திருக்கிறார்.

காவல் அதிகாரி டேவிட் கேரிக்
காவல் அதிகாரி டேவிட் கேரிக்
ட்விட்டர்

சிலரை 10 மணி நேரம் படிக்கட்டுக்கு அடியில் சிறிய அலமாரியில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. வீட்டில் இருந்த பெண்களை நிர்வாணமாகவே வைத்திருக்கிறார். அவர்களின் உடலில் பெல்ட்டுகளால் கட்டப்பட்டு, எனது அடிமை என எழுதப்பட்டும், அவர்கள் மீது சிறுநீர் கழிப்பது, அடிப்பது என கொடூரமாக கொடுமைப் படுத்தியிருக்கிறார். இந்தப் பெண்கள் அனைவரும் எதோ ஒரு காரணத்தால் பாதிக்கப்பட்டு, காவல் நிலையத்துக்கு வந்தவர்கள். அவர்களிடம் பேசி கவர்ந்து, அவர்களுடன் நெருக்கமாக பழகி, அவர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின், அவர்களை தங்கள் வீட்டிலேயே மிரட்டி தங்க வைத்திருக்கிறார்.

அதையும் மீறினால், அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதகாகவும் மிரட்டியிருக்கிறார். இதில் அதிர்ச்சியூட்டும் விதமாக, 2000 - 2021-க்கு இடையில் இதுபோன்ற ஒன்பது சம்பவங்களில் டேவிட் கேரிக் மிது பெருநகர காவல்துறையிடம் புகார் கூறப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் முறைப்படி புகார் செய்ய மறுத்ததால் அல்லது போலீஸ் விசாரணையில் ஒத்துழைப்பு கொடுக்காததால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காவல் அதிகாரி டேவிட் கேரிக்
காவல் அதிகாரி டேவிட் கேரிக்
ட்விட்டர்

ஏறக்குறைய 20 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய கேரிக் குறித்து கண்டறிய தவறியதில் பெருநகர காவல்துறை தங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்தக் குற்றத்தை தொடர்ந்து செய்வதற்கு காவல் அதிகாரி என்ற பதவியை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.