Published:Updated:

`லண்டனில் வேலை செய்கிறேன்’ - மேட்ரிமோனி தளம் மூலம் பழக்கம்! - பெண்ணிடம் ரூ.62 லட்சம் மோசடி

சித்திரிப்புக் காட்சி

லண்டனில் சிவில் இன்ஜினீயராக இருப்பதாகக் கூறி புனேயைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.62 லட்சத்தை ஆன்லைன் மோசடிப் பேர்வழிகள் அபகரித்துள்ளனர்.

`லண்டனில் வேலை செய்கிறேன்’ - மேட்ரிமோனி தளம் மூலம் பழக்கம்! - பெண்ணிடம் ரூ.62 லட்சம் மோசடி

லண்டனில் சிவில் இன்ஜினீயராக இருப்பதாகக் கூறி புனேயைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.62 லட்சத்தை ஆன்லைன் மோசடிப் பேர்வழிகள் அபகரித்துள்ளனர்.

Published:Updated:
சித்திரிப்புக் காட்சி

புனேயைச் சேர்ந்த சம்யுக்தா (32) என்ற பெண், வரன் தேடி மேட்ரிமோனியல் தளத்தில் தனது தகவல்களைப் பதிவு செய்து வைத்திருந்தார். இதைப் பார்த்த ரஞ்சித் என்பவர், அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டார். தான் இங்கிலாந்தில் சிவில் இன்ஜினீயராக இருப்பதாகவும், அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். சம்யுக்தாவும் அதை அப்படியே நம்பினார். ரஞ்சித், தான் இந்தியாவில் வந்து செட்டில் ஆகப்போவதாகத் தெரிவித்தார். இதற்காகத் தனது உடைமைகளை முதலில் அனுப்பிவைப்பதாகவும், அவற்றை வாங்கி வைக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

அடுத்த சில நாள்களில் இங்கிலாந்திலிருந்து பார்சல் வந்திருப்பதாகக் கூறி, டெல்லி விமான நிலையத்திலிருந்து சுங்க அதிகாரிகள் பேசுவதாகக் கூறி சிலர் சம்யுக்தாவைத் தொடர்புகொண்டனர்.

சித்திரிப்புக் காட்சி
சித்திரிப்புக் காட்சி

பார்சலை விடுவிக்க வேண்டுமானால் பல்வேறு வகையான கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். அதோடு ரிசர்வ் பேங்கிலிருந்து பேசுவதாகக் கூறி பார்சலில் வெளிநாட்டு கரன்சி இருப்பதாகவும், அதற்கு சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினர். இரு தரப்பினரும் மாறி மாறி பல்வேறு காரணங்களைக் கூறி அந்தப் பெண்ணிடமிருந்து ரூ.62 லட்சம் அளவுக்கு பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ஆன்லைனில் டிரான்ஸ்ஃபர் செய்து வாங்கிக்கொண்டனர்.

தொடர்ந்து பணத்தை அனுப்பியும் பார்சல் வந்து சேரவில்லை. அதேசமயம் தொடர்ந்து பணம் கேட்டுக்கொண்டே இருந்தனர். இதனால் சம்யுக்தா இது குறித்து போலீஸில் புகார் செய்தார். புனே பிம்ப்ரி-சிஞ்ச்வாட் போலீஸார் இது குறித்து மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இதற்கு முன்பும் இதேபோல எத்தனையோ மோசடிச் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனாலும் மக்கள் தொடர்ந்து மோசடிப் பேர்வழிகளின் வலையில் விழுந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism