Published:Updated:

`மதுபோதையில் மனைவி, மகனை வெட்டிய தந்தை; கொலை செய்த மகன்!' -சென்னையில் நடந்த கொடூரம் #Lockdown

கொலை
கொலை ( மாதிரிப் படம் )

சென்னை எண்ணூரில் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்த மனைவி, மகனை அரிவாளால் வெட்டிய தந்தையை ஆத்திரத்தில் மூத்தமகன் கொலை செய்தார்.

சென்னையை அடுத்த எண்ணூர், அன்னை சிவகாமி நகர், 4-வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் (45) லாரி டிரைவர். இவரின் மனைவி தையல் நாயகி (40). இந்தத் தம்பதிக்கு சேதுபதி, தமிழ்ச் செல்வன் என 2 மகன்கள் உள்ளனர். தமிழ்ச்செல்வன் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கொலை செய்யப்பட்ட நாகராஜ்
கொலை செய்யப்பட்ட நாகராஜ்
`தடம் மாறிய அம்மாவின் வாழ்க்கை; தட்டிக்கேட்ட மகள் கொலை!'- 6 ஆண்டுகளுக்குப் பிறகு துப்பு துலங்கியது

கடந்த 3 மாதங்களாக நாகராஜ், வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும், மதுவுக்கும் அடிமையான இவர், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்தார். ஊரடங்கு காரணமாக நாகராஜ் வீட்டில் அனைவரும் இருந்தனர். நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த நாகராஜ் மனைவி தையல் நாயகியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். அதனால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வீட்டிலிருந்த தமிழ்ச்செல்வன் தட்டிக்கேட்டார். அதனால் நாகராஜ், ஆத்திரமடைந்து அரிவாளை எடுத்து தையல்நாயகியைக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்.

அதை தமிழ்ச்செல்வன் தடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், மகன் என்றும் பாராமல் அரிவாளால் தமிழ்ச்செல்வனின் கையில் வெட்டியுள்ளார். அதைப்பார்த்த தையல்நாயகி அதிர்ச்சியடைந்ததோடு நாகராஜை திட்டினார். பின்னர் மகனைக் காப்பாற்ற முயன்றார். அப்போது, தையல் நாயகி மீதும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு மூத்த மகன் சேதுபதி வீட்டுக்குள் வந்தார்.

`கபசுர குடிநீர் #Corona-வைக் கட்டுப்படுத்துமா?!’ -தேசிய சித்த மருத்துவமனை இயக்குநர் மீனாகுமாரி பதில்
கத்தி
கத்தி

அம்மாவையும் தம்பியையும் நாகராஜ் அரிவாளால் வெட்டியதைப் பார்த்த சேதுபதி, அதைத் தடுத்ததோடு அப்பாவிடமிருந்த அரிவாளைப் பிடுங்கினார். இதனால் நாகராஜுக்கும் சேதுபதிக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் அதே அரிவாளைக் கொண்டு தந்தை நாகராஜை சரமாரியாக வெட்டினார் சேதுபதி. இதில் பலத்த காயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, ரத்தக்கறைப் படிந்த கத்தியோடு சேதுபதி எண்ணூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதற்கிடையில் காயமடைந்த தையல்நாயகி, தமிழ்ச்செல்வன் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், நாகராஜின் சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தந்தையைக் கொலை செய்த குற்றத்துக்காக சேதுபதியை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை நடந்த வீடு முழுவதும் ரத்தக்கறையாக காட்சியளித்தது. மேலும், வீட்டில் உள்ள பொருள்களும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.

தந்தையைக் கொலை செய்த மகன்
தந்தையைக் கொலை செய்த மகன்
`அம்மன் கோபத்துக்கு ஆளாக முடியுமா?!' -ஊரடங்கு உத்தரவை மீறி திருவிழா நடத்திய குளித்தலை மக்கள்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட நாகராஜ், 2016-ம் ஆண்டு சொத்துத் தகராறில் தன்னுடைய 80 வயது தாத்தாவைக் கொலை செய்த குற்றத்துக்காக சிறைக்குச் சென்றவர். தற்போது அவரின் மகனால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த தையல்நாயகி, தமிழ்ச்செல்வனிடம் வாக்குமூலம் பெற்றுள்ளோம். மேலும், ஊரடங்கின்போது நாகராஜுக்கு எப்படி மதுபானம் கிடைத்தது என்று தெரியவில்லை. அதுதொடர்பாகவும் விசாரித்துவருகிறோம்" என்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு