Published:Updated:

நண்பர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் தகராறு; போதையில் தாக்குதல் - லாரி ஓட்டுநர் கொலையில் நடந்தது என்ன?

கொலை

மதுபோதையில் லாரி டிரைவர் ஒருவர் இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் தகராறு; போதையில் தாக்குதல் - லாரி ஓட்டுநர் கொலையில் நடந்தது என்ன?

மதுபோதையில் லாரி டிரைவர் ஒருவர் இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
கொலை

சென்னை ஆவடி கவுரிபேட்டையைச் சேர்ந்தவர் மனோஜ் (27). அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர்கள் இருவரும் ஆவடி ஹவுஸ்சிங் போர்டு பகுதியில் தண்ணீர் லாரி டிரைவர்களாக இருந்தனர். இந்நிலையில் இன்று காலை 6.50 மணியளவில் மனோஜ், பாபு மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் மது அருந்தியுள்ளனர். பின்னர் போதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரபு, அவரின் நண்பர்கள், மனோஜை இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

கொலை
கொலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரத்த வெள்ளத்தில் மனோஜ் உயிரிழந்தனர். இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மனோஜின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனோஜை கொலை செய்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்..

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``லாரி டிரைவர்கள் மனோஜ், பிரபு ஆகிய இருவரும் நண்பர்கள். இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்துள்ளது. இன்று காலை நண்பர்களோடு மனோஜ், பிரபு மதுஅருந்தியுள்ளனர். மனோஜை பிரபுவும் மற்றவர்களும் கிண்டல் செய்துள்ளனர். அதன்பிறகுதான் மனோஜ் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரபு, அவரின் நண்பர்களிடம் விசாரித்தால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism