Published:Updated:

`முறிந்துபோன காதல்; முகத்தில் ஆசிட் வீசிய இளம்பெண்!’- ஒடிசா இளைஞருக்கு நேர்ந்த கதி

ஒடிசாவில் இளம்பெண் ஒருவர் தன் ஆண் நண்பர் மீது ஆசிட் ஊற்றிய சம்பவம் நடந்துள்ளது.

ஆசிட் வீச்சில் காயமடைந்த இளைஞர்
ஆசிட் வீச்சில் காயமடைந்த இளைஞர்

ஒடிசா மாநிலம் ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரிக் (Alekh Barik). சலூன் கடை நடத்தி வருகிறார். இவரும் அதேபகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சில வருடங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். ஆனால், அந்தப்பெண் மீண்டும் பாரிக்கை தொடர்பு கொண்டுள்ளார். அடிக்கடி தொலைப்பேசியில் அழைத்தும் வந்துள்ளார். ஆனால், பாரிக் தொடர்ந்து அவரை தவிர்த்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அந்தப்பெண் பேச வேண்டும் என பாரிக்கை அழைத்துள்ளார். பின், அவரது சலூன் அருகில் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தீடீரென அந்தப் பெண் ஆசிட் கொண்டு பாரிக்கைத் தாக்கியுள்ளார். இதில் பாரிக் முகம் மற்றும் மார்பு பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

 ஆசிட்
ஆசிட்

வலியால் துடித்த இளைஞரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கட்டாக்கில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பாரிக். அந்த இளைஞர் மீது ஆசிட் வீசிய பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பேசிய அதிகாரிகள், “அந்தப் பெண்ணுக்கும் இளைஞருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. சமீபத்தில் இருவரும் பிரிந்துள்ளனர். அந்தப்பெண் தன்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்ததாக அந்த இளைஞர் கூறுகிறார். பழைய பழக்கங்களைக் கூறி அவரை பிளாக்மெயில் செய்வதாகவும், அடிக்கடி வெளியில் அழைத்துச் செல்லுமாறும் தொந்தரவு செய்ததாகக் கூறுகிறார்.

ஜன்னல் வழியே டார்ச் வெளிச்சம்... திசை மாறும் கேமரா!- சென்னைவாசிகளை அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்

இதுமட்டுமல்ல பொருள்கள் இன்னும் பிற விஷயங்களை தன் விருப்பப்படி செய்து தரும்படி அந்த இளைஞரை அவர் வற்புறுத்தியதாகத் தெரிகிறது. இதையடுத்து நேற்று மாலை இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே ஆசிட் வீசியுள்ளார். பேட்டரிகளுக்குப் பயன்படுத்தும் ஆசிட்டைச் சேகரித்து வந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். முதல்கட்ட விசாரணையில் காதல் தோல்விதான் இந்தச் சம்பவத்துக்குக் காரணம் எனத் தெரிகிறது. முழுமையான விசாரணைக்குப் பின்னரே உண்மையான தகவல் தெரியவரும்” என்றனர்.