Published:Updated:

திருமணம் தாண்டிய உறவு... தன் மகளையே திருமணம் செய்துகொண்ட காதலனை சுத்தியால் அடித்துக் கொன்ற மூதாட்டி!

மும்பையில் தன் மகளைத் திருமணம் செய்த காதலனை 70 வயது பெண் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மும்பை மத்தியப் பகுதியில் வசிப்பவர் சாந்திபால் (70). இவரின் காதலன் பிமல் கண்ணா (57). இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்துவந்தனர். சாந்திபாலுக்கு முதல் கணவர் மூலம் ஒரு மகள் இருக்கும் நிலையில், பிமல் கண்ணா அடிக்கடி சாந்திபாலைப் பார்க்க வந்தபோது, அவரின் மகளுடனும் தொடர்பு ஏற்பட்டது. எனவே, பிமல் கண்ணாவும் சாந்திபால் மகளும் திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு வீட்டுக்கு வந்தபோது சாந்தி பால் அதிர்ச்சியடைந்தார். இரவில் பிமலுடன் சாந்திபால் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோபத்தில் சாந்தி வீட்டில் கிடந்த சுத்தியலை எடுத்து பிமலைத் தாக்கியிருக்கிறார்.

கொலை
கொலை
சித்தரிப்புப் படம்

ஏற்கெனவே மூளையில் ஏற்பட்ட பிரச்னைக்குச் சிகிச்சை பெற்றுவந்த பிமல் மயங்கி விழுந்தார். மறுநாள் காலையில் பிமலை சாந்திபால் மருத்துவமனையில் சேர்த்தார். டாக்டர்கள் அவரைச் சோதித்துப் பார்த்தபோது விமல் இறந்திருந்தார். பிரேத பரிசோதனையில் பிமல் தாக்கப்பட்டதால்தான் இறந்ததாகத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சாந்தியைப் பிடித்து விசாரித்தபோது, பிமலைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீஸாரின் விசாரணையில், சாந்தி 1984-ம் ஆண்டு கலவரத்தின்போது பஞ்சாப்பிலிருந்து தன் மகளுடன் மும்பைக்கு வந்தார்; மும்பையில் பிமல் தனது இடத்தில் தங்க இடம் கொடுத்தார்; அதோடு பிமலுடன் சாந்திபால் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்; அவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தார் என்று விசாரணையில் தெரியவந்தது. ஆனால் சாந்தியின் முதல் திருமணத்தில் பிறந்த மகளை பிமல் திருமணம் செய்துகொண்டதால், தன் மகளின் வாழ்க்கையைக் கெடுத்துவிட்டதாகக் கூறி, ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார் என்று தெரியவந்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு