Published:Updated:

சேலம்: பிரவுசிங் சென்டர் உரிமையாளரிடம் பேடிஎம் மூலம் பண மோசடி... காதல் ஜோடியைக் கைதுசெய்த போலீஸ்!

காதலர்கள்

பிரவுசிங் சென்டர் உரிமையாளரிடம் ரூ.20 ஆயிரம் மோசடி செய்த காதல் ஜோடியை சைபர் கிரைம் போலீஸார் கைதுசெய்தனர்.

சேலம்: பிரவுசிங் சென்டர் உரிமையாளரிடம் பேடிஎம் மூலம் பண மோசடி... காதல் ஜோடியைக் கைதுசெய்த போலீஸ்!

பிரவுசிங் சென்டர் உரிமையாளரிடம் ரூ.20 ஆயிரம் மோசடி செய்த காதல் ஜோடியை சைபர் கிரைம் போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
காதலர்கள்

சேலம், வின்சென்ட் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் பிரவுசிங் சென்டர் வைத்திருக்கிறார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இளம் காதல் ஜோடி அவருடைய கடைக்கு வந்திருக்கின்றனர். அப்போது கடை உரிமையாளரிடம் சென்று, தங்களுடைய நண்பரின் அக்கவுன்ட்டுக்கு ரூ.20 ஆயிரம் பணம் அனுப்புமாறு கேட்டுள்ளனர். அதற்கு நாகராஜன் தனக்கு கமிஷன் கிடைக்கும் என்ற ஆசையில் பணம் அனுப்ப ஒப்புக்கொண்டிருக்கிறார். பணமும் அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது. அதன் பிறகு, அந்த காதல் ஜோடி நாகராஜனுக்கு பேடிஎம்-ல் பணம் அனுப்பிவிட்டதாகக் கூறி ஸ்க்ரீன் ஷாட் எடுத்துக் காட்டியுள்ளனர்.

பேடிஎம்
பேடிஎம்

ஆனால் நீண்ட நேரமாகியும் தன்னுடைய அக்கவுன்ட்டுக்குப் பணம் வந்ததாக எந்தவித மெசேஜும் வராததால், சந்தேகம் அடைந்த நாகராஜன் சம்பந்தப்பட்ட அந்த காதல் ஜோடியிடம் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்திருக்கின்றனர். இதனால் சந்தேகம் அடைந்த நாகராஜன் சேலம் மாநகர சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்திருக்கிறார். அதன் மூலம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டதில், சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போன் டவர் சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருப்பது தெரியவந்திருக்கிறது.

 மோசடி
மோசடி
vikatan

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், எஸ்.ஐ தினேஷ் தலைமையிலான போலீஸார் சம்பந்தப்பட்ட காதல் ஜோடியைக் கைதுசெய்தனர். பின்னர் போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் சென்னை, பூந்தமல்லியைச் சேர்ந்த ஜோசப் ஜெயப்பிரகாஷ் என்பவரின் மகன் எட்வின் தாமஸ் என்றும், ஆந்திராவைச் சேர்ந்த செரில் ஏஞ்சல் என்றும் தெரியவந்தது. இருவரும் சென்னையிலுள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் சேர்ந்து படித்துள்ளனர்.

பின்னர் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டதாக விசாரணையில் கூறியுள்ளனர். மேலும் ஜாலியாக ஊர் சுற்றிவரும் இந்தக் காதல் ஜோடி செலவுக்காக இது போன்ற மோசடியில் அடிக்கடி ஈடுபட்டுவந்ததும் தெரியவந்திருக்கிறது. எட்வின் தாமஸ் மீது மட்டும் சென்னையில் ஐந்து மோசடி வழக்குகள் இருப்பதாக போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் இருவரிடமும் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.