Published:Updated:

ம.பி: 11 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த நபர்; வீட்டை இடித்த அதிகாரிகள்! - என்ன நடந்தது?

இடிக்கப்பட்ட வீடு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 11 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவரின் வீட்டை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.

ம.பி: 11 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த நபர்; வீட்டை இடித்த அதிகாரிகள்! - என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 11 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவரின் வீட்டை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.

Published:Updated:
இடிக்கப்பட்ட வீடு

மத்தியப் பிரதேசம் மாநிலம், குவாலியர் நகரில் உள்ள சுபாஷ் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் 65 வயதான சதுர்புஜ் ரத்தோர். இவர் அந்த பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக ஆசைகாட்டி அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, காவல்துறையினர் சதுர்புஜ் ரத்தோரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இடிக்கப்பட்ட வீடு
இடிக்கப்பட்ட வீடு

11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சதுர்புஜ், சுபாஷ் நகர்ப் பகுதியில் வசித்துவந்த வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த வீடு புல்டோசரின் உதவியோடு மொத்தமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த வீடு இடிக்கப்படும் போது எதிர்ப்புத்தெரிவித்த சதுர்புஜின் உறவினர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும், வீடு இடிக்கப்பட்டது தொடர்பாக குவாலியர் மாவட்ட ஆட்சியர் ட்விட்டரில் ஒரு பதிவு செய்திருந்தார். அந்த பதிவில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங், ``மத்தியப் பிரதேச மண்ணில் மாஃபியாக்களுக்கு இடமில்லை. உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் அல்லது மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள். இல்லை என்றால் புல்டோசர் தான் ஓடும்" என்று பதிவு செய்திருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism