Published:Updated:

ம.பி: தோழியைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம்... வீட்டுக்குள் புகுந்து ரகளைசெய்த இளம்பெண் கைது!

பெண் கைது

தோழியைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறி, அவரின் வீட்டுக்கே சென்று மிரட்டிய மத்தியப் பிரதேசப் பெண்ணை போலீஸார் கைதுசெய்தனர்.

ம.பி: தோழியைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம்... வீட்டுக்குள் புகுந்து ரகளைசெய்த இளம்பெண் கைது!

தோழியைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறி, அவரின் வீட்டுக்கே சென்று மிரட்டிய மத்தியப் பிரதேசப் பெண்ணை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
பெண் கைது

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய தோழியைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறி, ராஜஸ்தானிலுள்ள தோழியின் வீட்டுக்கே சென்று ரகளைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சம்பந்தப்பட்ட பெண்கள் இருவரும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் என வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும், சமூக ஊடகங்களின் வாயிலாக இருவரும் நண்பர்களாகி பழகியிருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.

சமூக வலைதளம்
சமூக வலைதளம்

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் , திடீரென நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம், நாகூரிலிருக்கும் தோழியின் வீட்டுக்குச் சென்று, அவரைத் திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ விரும்புவதாகவும், ரூ.10 லட்சம் பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், தான் கேட்டதைச் செய்யாவிட்டால், தோழியின் உரையாடல்களை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாகவும் அவர் மிரட்டியிருக்கிறார். அதையடுத்து அச்சமடைந்த ராஜஸ்தான் தோழியின் குடும்பத்தினர், இது குறித்து உடனடியாக போலீஸில் புகாரளித்திருக்கின்றனர்.

பெண் கைது
பெண் கைது

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் நேற்று, சம்பந்தப்பட்ட பெண்மீது வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தனர். பின்னர் இது குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரி ராம் மூர்த்தி ஜோஷி, ``மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண், சனிக்கிழமை இரவு நாகூரிலுள்ள தன் தோழியின் வீட்டுக்குச் சென்று சலசலப்பை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர், அவருடைய குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். அதன் பிறகு சம்பந்தப்பட்ட பெண்மீது, வீட்டில் அத்துமீறி நுழைந்து பணம் பறிக்க முயன்றதாக வழக்கு பதிவுசெய்து, அவரைக் கைதுசெய்தோம்" எனத் தெரிவித்தார்.