Published:Updated:

மனநலம் குன்றிய இளம்பெண் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றக் கிளை புதிய உத்தரவு!

gh sivaganga
gh sivaganga

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் 24 வார கருவை கலைக்க அனுமதி அளித்து, உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அளித்த மனு ஒன்றில், ''நான் ஒரு கூலித் தொழிலாளி. என் கணவர் இறந்த சூழலில் ஆடு மேய்த்து குடும்பத்தைப் பார்த்துவருகிறேன்.

மனநலம் குன்றிய இளம்பெண் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றக் கிளை புதிய உத்தரவு!

என் இரண்டாவது மகளுக்கு வலிப்பு ஏற்படும். அதேபோல் அவள் மனநலம் பாதிக்கப்பட்டவள். இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பக்கத்து வீட்டு முதியவர் காசி, என்னுடைய மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அறிந்த பின், சிவகங்கை மாவட்ட அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால், காசி சிறையில் இருந்துவருகிறார்.

இந்த நிலையில், என் மகள் 12 வாரம் கர்ப்பிணியாக உள்ளாள். அவள் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், தற்போதைய தன் நிலையை உணராமலும் வெகுளியாகவே இருக்கிறாள்.

சிவகங்கை மருத்துவமனை
சிவகங்கை மருத்துவமனை

அவள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான நல்ல உடல் மற்றும் மனநிலையில் இல்லை. எனவே, என் மகளின் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க மருத்துவமனைக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தொடர்பான விசாரணைகளில், சிவகங்கை அரசு மருத்துவமனை முதல்வர் தரப்பில், ``மனுதாரரின் மகள் 24 வாரம் கருவுற்றிருப்பது மருத்துவ ரீதியாக உறுதி. பாதிக்கப்பட்ட பெண், தற்போது கருவைக் கலைப்பதற்கான உடல் தகுதியாக உள்ளார்'' என்று பதிலளிக்கப்பட்டது.

madurai hc
madurai hc

இந்நிலையில், இன்று நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, மனநலக் குறைபாடுடைய இளம்பெண்ணின் 24 வார கருவைக் கலைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு