Published:Updated:

`முறைகேடு புகார்; செல்போன் நம்பர் டிராக்கிங்!' - சிக்கிய பா.ஜ.க பிரமுகர் எல்ஃபின் ராஜா

எல்ஃபின் ராஜா
News
எல்ஃபின் ராஜா

`கைது செய்யப்போகிறோம் என்று முடிவானதும், திருச்சியிலிருந்து பெரம்பலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அவரது செல்போன் நம்பரை டிராக்கிங் செய்து, அவரை பாடாலூரில் கைது செய்தோம்.’

பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கிவந்த எல்ஃபின் ராஜாவை மதுரை குற்றப்பிரிவு போலீஸார் நேற்றிரவு கைது செய்த விவகாரம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சமீபத்தில்தான் பா.ஜ.க-வில் இணைந்தார். `20 லட்சம் பேரை பா.ஜ.க-வில் இணைக்கப்போகிறேன்’ என்று சொல்லிவந்தவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

எல்ஃபின் நிதி நிறுவனம்
எல்ஃபின் நிதி நிறுவனம்

`எல்ஃபின்’ என்கிற நிறுவனம், திருச்சியை மையமாகக்கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்தை ராஜாவும் அவரின் தம்பி ரமேஷும் நடத்திவருகிறார்கள். இந்நிறுவனம் எல்.எல்.எம் போன்று ஆட்களைப் பிடிப்பது, அவர்களுக்காக சில பொருள்களை உருவாக்கி, அவற்றை விற்கச் சொல்லி ஆட்களைப் பிடிப்பது போன்ற வேலையைச் செய்துவந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எல்ஃபின் உரிமையாளர் தம்பி ரமேஷ், அண்ணன் ராஜா
எல்ஃபின் உரிமையாளர் தம்பி ரமேஷ், அண்ணன் ராஜா

இவற்றை ஒவ்வொருவரும் தொடர்ந்து செய்யும்போது, அதில் ஈடுபடுபவர்களுக்கு கமிஷன் கொடுப்பார்கள். முதலில் மளிகைப் பொருள்களில் தொடங்கியவர்கள் நாளடைவில் வீடுகட்டிக் கொடுப்பது, காலி இடங்களை வாங்கி, விற்பது போன்ற ரியல் எஸ்டேட் சம்பந்தமான தொழில்களையும் செய்துவந்தனர்.

ஆரம்பத்தில் நிறைய பேர் இவர்களை நம்பிச் சேர்ந்தனர். அதிகமாகச் சேர்ந்ததும், `அறம் மக்கள் நலசங்கம்' என்று ஆரம்பித்தனர் ரமேஷும் ராஜாவும். அத்துடன், மக்களிடம் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றத் தொடங்கினார்கள். அதன் விளைவு, தற்போது இவர்கள்மீது ஐந்து வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

எல்ஃபின் ராஜா
எல்ஃபின் ராஜா

இவர்களின் பணி இப்படித் தொடர்ந்துகொண்டிருக்க... விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த காக்கிவாடன்பட்டி, மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் பட்டாசு தொழிற்சாலை நடத்திவருகிறார். இவரிடம் ராஜாவும் அவர் தம்பி எஸ்.ஆர்.கே.ரமேஷ்குமாரும் 4.63 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டதாக அப்போதைய மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை சந்தித்துப் புகார் அளித்தார் கோவிந்தராஜ். இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்திருந்தார்கள். மீதமுள்ள பணத்தை ஒரு வருடத்துக்குள் கொடுத்துவிடுவதாக போலீஸாரிடம் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார் எல்ஃபின் ராஜா. இன்றுவரை பணம் கொடுக்கவில்லை என்று மீண்டும் பட்டாசு கோவிந்தராஜ் காவல்நிலையத்தில் புகாரளித்தார் . அதன்பேரில் நேற்று இரவு மதுரை குற்றப்பிரிவு போலீஸார் ராஜாவை, அதிகாலை 2 மணியளவில் பெரம்பலூர் அருகேயுள்ள பாடாலூர் என்ற இடத்தில் கைது செய்து அழைத்துச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

அதிகாரிகள் எல்ஃபின் அலுவலகத்துக்கு சீல் வைப்பு
அதிகாரிகள் எல்ஃபின் அலுவலகத்துக்கு சீல் வைப்பு

மோசடிப் புகார்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காகவே ராஜா பா.ஜ.க-வில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. `இவர் போன்றோரைக் கட்சியில் இணைத்துக்கொண்டால் கட்சிக்குத்தான் கெட்டப்பெயர்’ என்று திருச்சியிலுள்ள பா.ஜ.க நிர்வாகிகளே வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார்கள். இது பெரும் சர்ச்சையானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.``ராஜா முறைகேடு செய்துவிட்டதாக கோவிந்தராஜ் என்பவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் அவரை ஒரு வாரமாகக் கண்காணித்துக்கொண்டிருந்தோம்.

இந்நிலையில், ராஜாவைக் கைது செய்யப்போகிறோம் என்று முடிவானதும், திருச்சியிலிருந்து பெரம்பலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அவரது செல்போன் நம்பரை டிராக்கிங் செய்து, அவரை பாடாலூரில் கைது செய்தோம். பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டால் ராஜா விடுவிக்கப்படுவார். இல்லையென்றால் கைதாகி சிறையில் அடைக்கப்படுவார்" என்று முடித்துக்கொண்டனர்.