Published:Updated:

`காதல் திருமணத்துக்கு உதவி..மிரட்டல் ஆடியோ!' -இளைஞர் கொலையில் தலைமறைவான அ.தி.மு.க புள்ளி?

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

மணிகண்டனைத் தீர்த்துக்கட்ட விஜயன் பலமுறை முயற்சி செய்துள்ளார். மணிகண்டனின் நண்பர்களிடம் கொலை மிரட்டல் விடுத்துப் பேசிய ஆடியோக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் கடந்த 8-ம் தேதி மணிகண்டன் என்ற இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அ.தி.மு.க நகரச் செயலாளர் விஜயன் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவரை கைது செய்யாமல் காவல்துறை அலட்சியம் காட்டுவதாகக் கூறி பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருவதால் திருமங்கலம் வட்டாரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க நகரச் செயலாளர் விஜயன்
அ.தி.மு.க நகரச் செயலாளர் விஜயன்

தனியார் நிறுவனத்தில் வேலை செய்து மதுரை தபால் தந்தி நகரில் வசித்து வரும் மணிகண்டனுக்குத் திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 8-ம் தேதி நண்பர்களைக் காண சென்றவர், தோட்டம் ஒன்றில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்துள்ளார். அப்போது உணவு வாங்கி வர நண்பர்கள் சென்றுவிட, சக்திவேல்,பிரகாஷ் ஆகியோர் மட்டும் மணிகண்டனுடன் இருந்துள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது அவர்கள் இருவரும் அங்கு இல்லை. மணிகண்டன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட மணிகண்டனுக்கும் அ.தி.மு.க நகரச் செயலாளர் விஜயனுக்கும் என்ன பகை என்று விசாரித்ததில், விஜயனின் மகள் சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டதற்கு மணிகண்டன் உதவியுள்ளார்.

மூடப்பட்ட காவல் நிலையம், தீயணைப்பு நிலையம்! - கொரோனா தொற்று அதிகரிப்பால் அச்சத்தில் மதுரை

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மணிகண்டனைத் தீர்த்துக் கட்ட விஜயன் பலமுறை முயற்சி செய்துள்ளார். மணிகண்டனின் நண்பர்களிடம் கொலை மிரட்டல் விடுத்துப் பேசிய ஆடியோக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்தநிலையில், நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டன் மது அருந்த தோட்டத்துக்கு வந்தபோது, அவருடைய நண்பர்கள் இருவரை வைத்தே அவரைக் கொலை செய்ய வைத்திருக்கிறார் விஜயன். ஆளும்கட்சி நகரச்செயலாளர் என்பதால் கொலை நடந்து நான்கு நாள்கள் ஆகியும் கைது செய்யக் காவல்துறை அலட்சியம் காட்டுகிறது'' எனக் கொதிக்கின்றனர் மணிகண்டனின் உறவினர்கள்.

விரக்தியின் விளிம்பில் மருத்துவர்கள், செவிலியர்கள்... தமிழகக் கொரோனா வார்டுகளில் நிலவும் அவலம்!

இது சம்பந்தமாக செக்காணூரணி இன்ஸ்பெக்டர் அனிதாவிடம் பேசினோம் ``வழக்கை தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம். குற்றவாளி விஜயன் தலைமறைவாகியுள்ளார். அவரை விரைவில் பிடித்து விடுவோம். அரசியல் தலையீடெல்லாம் இல்லை'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு