Published:Updated:

கஞ்சா வியாபாரிகளாகும் மாணவர்கள்! - எங்கே செல்லும் இந்தப் பாதை?

கஞ்சா
பிரீமியம் ஸ்டோரி
கஞ்சா

உள்ளூர் கஞ்சா வியாபாரிகள் மற்றும் ஆந்திராவில் கஞ்சா பயிரிடுவோரின் சொத்துகளை போலீஸ் பறிமுதல் செய்துவிடுகின்றனர்.

கஞ்சா வியாபாரிகளாகும் மாணவர்கள்! - எங்கே செல்லும் இந்தப் பாதை?

உள்ளூர் கஞ்சா வியாபாரிகள் மற்றும் ஆந்திராவில் கஞ்சா பயிரிடுவோரின் சொத்துகளை போலீஸ் பறிமுதல் செய்துவிடுகின்றனர்.

Published:Updated:
கஞ்சா
பிரீமியம் ஸ்டோரி
கஞ்சா

கஞ்சா தொழிலில், மதுரை மாவட்டம் மிகப்பெரிய ‘ஹப்’பாகச் செயல்பட்டுவருவது அதிர்ச்சியென்றால், இந்தத் தொழிலில் பள்ளி-கல்லூரி மாணவர்களும், சிறுவர்களும் ஈடுபடுத்தப்பட்டிருப்பது பேரதிர்ச்சி!

இது குறித்து நம்மிடம் பேசிய சமூகச் செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான முத்துக்குமார், ‘‘மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், பள்ளி-கல்லூரி மாணவர்களையும், வேலை தேடும் இளைஞர்களையும் ஒரு கும்பல் ‘பிரெய்ன் வாஷ்’ செய்து கஞ்சா, போதை மாத்திரை விற்பனைக்குப் பயன்படுத்திவருகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய கஞ்சா வியாபாரிகள் உள்ளூரில் மட்டுமல்லாமல், இலங்கைக்கும் டன் கணக்கில் சரக்குகளை அனுப்பிவருகிறார்கள். இதற்காக, ராமேஸ்வரம், தூத்துக்குடிப் பகுதி மீனவர்களையும் பயன்படுத்தி வருகிறார்கள்.

அஸ்ரா கார்க்
அஸ்ரா கார்க்

உள்ளூர் கஞ்சா வியாபாரிகள் மற்றும் ஆந்திராவில் கஞ்சா பயிரிடுவோரின் சொத்துகளை போலீஸ் பறிமுதல் செய்துவிடுகின்றனர். எனவே, கஞ்சா விநியோகத்தில் நேரடியாக இறங்காத இந்தக் கும்பல்கள், பெண்களையும் மாணவர்களையும் தொழிலில் பயன்படுத்தி வருகின்றன. இவர்கள் மதுரை, தேனி, திண்டுக்கல், காரைக்குடியில் அறை எடுத்து தங்கிக்கொண்டு டூ வீலரில் கல்லூரிக்குச் செல்வதுபோல் கஞ்சா பார்சல்களையும், போதை ஊசி, மாத்திரைகளையும் கொண்டு போய்ச் சேர்க்கிறார்கள். சில்லறை விற்பனையாக மொபைல் மூலம் ஆர்டர் பெற்று டோர் டெலிவரியும் செய்கிறார்கள். வாட்ஸ்அப் குரூப் வைத்து பள்ளி, கல்லூரி வளாகங்களிலும் விற்கிறார்கள். பொதுவாக கஞ்சா வியாபாரிகளை நெருங்கவே மாணவர்கள் பயப்படுவார்கள். ஆனால், சக மாணவர்களே விற்கும்போது ரொம்ப இயல்பாக அதை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். இதனால் மாணவர்கள் மத்தியில் இந்தப் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது’’ என்று அதிரவைத்தார்.

கஞ்சா வியாபாரிகளாகும் மாணவர்கள்! - எங்கே செல்லும் இந்தப் பாதை?

கடந்த மாதத்தில் மட்டும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி விற்பனை செய்த வழக்கில் அதிக அளவில் கல்லூரி மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து, தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க்கிடம் கேட்டபோது, ‘‘கஞ்சா வியாபரிகள் அந்தத் தொழிலை விட வேண்டும் என்ற நோக்கில்தான் அவர்களின் சொத்துகளையும், பேங்க் அக்கவுன்ட்டையும் முடக்கிவருகிறோம். ஆனாலும் ஒரு சிலர் இந்தத் தொழிலில் தொடர்ந்து இருந்துகொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களையும் பயன்படுத்திவருகின்றனர். எனவே, பள்ளி, கல்லூரி என மாணவர்கள் அதிகமிருக்கும் இடங்களை தனிப்படையினர் மூலம் கண்காணித்து, கஞ்சா விறபனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறோம். எங்கள் துறையில் இருந்துகொண்டே இந்தத் தொழிலுக்கு உதவி செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். விரைவில் இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டுவோம்’’ என்றார்.

நாளைய இந்தியா இளைஞர்களின் கையில்... ஆனால், அவர்களின் கையில்?!