Published:Updated:

தீபாவளி... மது போதை; மகனைக் கொன்ற தந்தை, மகளைக் கொல்ல முயன்ற சித்தப்பா... - மதுரை மண்டல அதிர்ச்சி

கொலை ( மாதிரிப் படம் )

மது குடித்துவிட்டு தகராறு செய்த மகனை, தந்தையே கொலை செய்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தீபாவளி... மது போதை; மகனைக் கொன்ற தந்தை, மகளைக் கொல்ல முயன்ற சித்தப்பா... - மதுரை மண்டல அதிர்ச்சி

மது குடித்துவிட்டு தகராறு செய்த மகனை, தந்தையே கொலை செய்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கொலை ( மாதிரிப் படம் )

சம்பவம் 1:

மதுரை வில்லாபுரம் ஹவுஸிங் போர்டு பகுதியில் வசிப்பவர் செல்வராஜ். தீபாவளி தினத்தன்று இவருடைய மகன் கங்காதரன் தொடர்ச்சியாக மது குடித்திருக்கிறார். மேலும் மது குடிக்கப் பணம் கேட்டு நச்சரித்து, கொடுக்காததால் வீட்டிலுள்ளவர்களை அசிங்கமாகத் திட்டியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை செல்வராஜ் கத்தியை எடுத்து மகனைக் கொலைசெய்திருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய தீபாவளி தினத்தில் மதுவின் விளைவால் பெற்ற மகனையே கொலை செய்துவிட்டு தந்தை சிறைக்குச் செல்லும் கொடுமை நிகழ்ந்தது.

மது விற்பனை
மது விற்பனை

சம்பவம் 2:

தீபாவளி அன்று டி.கல்லுப்பட்டி அருகே வெங்கடாசலபுரத்தில் மதுக்கடை முன் டூ வீலர் நிறுத்துவதில் பிரச்னை ஏற்பட்டு கல்லூரி மாணவர் அருண்குமார் ஒரு கும்பலால் கொலைசெய்யப்பட்டார். ஊர்மக்கள் மறியலில் ஈடுபட ஆறு பேரைக் கைதுசெய்திருக்கிறது போலீஸ்.

கொலை
கொலை

சம்பவம் 3:

சிவகங்கை மாவட்டம், கள்ளிவயல் கிராமத்தில் கணேசன் என்பவர் மதுபோதையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் குஞ்சாரம் என்ற மூதாட்டியை அசிங்கமாகப் பேசி தாக்க முயல, அவரைப்போலவே மது போதையிலிருந்த மூதாட்டியின் மகன் கண்ணன் என்பவர் உருட்டுக்கட்டையால் கடுமையாகத் தாக்க கணேசன் மரணமடைந்தார்.

சம்பவம் 4:

மதுரை பழஙங்காநத்தம் பகுதியில் வீட்டை எதிர்த்து பாலாஜி என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்ட பவித்ரா, தலை தீபாவளிக்கு கணவர் வீட்டு வாசல் முன் பட்டாசு விட்டுக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக மதுபோதையில் வந்த பவித்ராவின் சித்தப்பா கார்த்திக் என்பவர், திட்டமிட்டு மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்து கொலை செய்ய முயன்றிருக்கிறார். அங்கிருந்தவர்கள் தீயை அணைத்து பவித்ராவைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பொதுமக்களால் கடுமையாக தாக்கப்பட்ட கார்த்திக் வழக்கு பதிவு செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். .

டாஸ்மாக் மதுக்கடை
டாஸ்மாக் மதுக்கடை

இவையெல்லாம் மதுரை சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வெளியே தெரிந்த சில சம்பவங்கள். மதுரை மண்டலத்திலுள்ள மற்ற மாவட்டங்களில் மதுவின் விளைவால் நிகழ்ந்த சம்பவங்கள் கூடுதலாக இருக்கலாம்.

தமிழகத்தில் நடக்கிற பெரும்பாலான குற்றங்களுக்கு மதுவே அடிப்படையாக இருக்கிறது என்பதற்குச் சில உதாரணங்கள் இவை.

தீபாவளியை முன்னிட்டு மூன்று நாள்கள் நடந்த மது விற்பனையில் தமிழகத்திலேயே மதுரை மண்டலமே வழக்கம்போல் முதலிடத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. மதுவின் விளைவுதான் மேலே குறிப்பிட்டிருக்கும் சம்பவங்கள்.

மது விற்பனையில் கிடைத்திருக்கும் பெருமை கொண்டாடப்பட வேண்டியதா என்பதை தென்மாவட்ட மக்கள்தான் உணர வேண்டும்!