Published:Updated:

புதுக்கோட்டை: `12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு சாகும் வரை ஆயுள்; நீதிமன்றம் அதிரடி!'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வாலிபருக்கு சாகும் வரை  ஆயுள்!
வாலிபருக்கு சாகும் வரை ஆயுள்!

சிறுமிக்கு மாதவன் பாலியல் தொல்லை கொடுத்தது நிரூபிக்கப்பட்டதால், புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி இயற்கையாக மரணம் அடையும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி, சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அதே பகுதியில் தங்கி வேலை பார்த்துவந்த, திருச்சியைச் சேர்ந்த மாதவன்(27) என்ற இளைஞர், சிறுமியின் வீட்டுக்குச் சென்று சிறுமியிடம் தண்ணீர் கேட்டிருக்கிறார். அப்போது, சிறுமி தண்ணீர் எடுக்க வீட்டுக்குள் சென்ற போது, சிறுமியைப் பின் தொடர்ந்து சென்ற மாதவன், சிறுமியைத் தாக்கி அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
சித்தரிப்புப் படம்

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவர் வீட்டுக்கு விரைந்த அக்கம்பக்கத்தினர், சிறுமியை மீட்டதோடு, மாதவனுக்குத் தர்ம அடி கொடுத்து விராலிமலை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். கடந்த ஜூன் 20-ம் தேதி நடந்த இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, போக்சோ சட்டத்தின் கீழ் மாதவனைக் கைதுசெய்தார். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மகிளா நீதிமன்றம்
மகிளா நீதிமன்றம்

அதில், சிறுமிக்கு மாதவன் பாலியல் தொல்லை அளித்தது நிரூபிக்கப்பட்டதால், புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி, மாதவன் இயற்கையாக மரணம் அடையும் வரை ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பளித்தார். நீதிபதி தன் தண்டனைக் குறிப்பில், `பிரிவுகள் 342, 452 மற்றும் போக்சோ சட்டம் 2019-ன் கீழ், குற்றவாளி இயற்கை மரணத்தை எட்டும்வரை ஆயுள் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் செலுத்த வேண்டும். கட்டத்தவறினால், மேலும் 1வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதேபோல, பிரிவு 450-ன் கீழ், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் செலுத்த வேண்டும். கட்டத்தவறினால் 1வருடம் சிறைத் தண்டனை அளிக்கப்படும். மேலும், இதர பிரிவு 342-ன் கீழ் குற்றத்துக்கு 1வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும் செலுத்த வேண்டும். அதைக் கட்டத்தவறினால் 1 மாத சிறைத் தண்டனை அளிக்கப்படும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு நான்கு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், மகிளா நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

கரூர்: 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! - 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த மகிளா நீதிமன்றம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு