Published:Updated:

குழந்தையின் அழுகையை நிறுத்த 5 ரூபாய் கேட்ட தாய் - ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூரச் செயல்!

கொலை
கொலை ( Representational Image )

குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தது. இது குறித்து விவேக் மனைவி கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் விவேக்கைக் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

குழந்தையின் அழுகையை நிறுத்த 5 ரூபாய் கேட்டதால் ஆத்திரத்தில் குழந்தையைத் தூக்கி தரையில் அடித்துக் கொலை செய்திருக்கிறார் கொடூரத் தந்தை. இந்தக் கொடூரமான சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம், கோண்டியா மாவட்டத்தில் நடந்திருக்கிறது. இந்த மாவட்டத்திலுள்ள லொனாரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விவேக் உகே (28). மதுபோதைக்கு அடிமையான விவேக், அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்திவந்ததாகச் சொல்லப்படுகிறது.

க்ரைம் - கொலை
க்ரைம் - கொலை

அவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்தக் குழந்தை தொடர்ச்சியாக அழுது கொண்டிருந்தது. உடனே, `குழந்தையின் அழுகையை நிறுத்த மிட்டாய் வாங்கிக் கொடுக்க வேண்டும்’ என்று கூறி, கணவரிடம் 5 ரூபாய் கொடுக்கும்படி மனைவி கேட்டிருக்கிறார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வீட்டுக்குத் தெரியாமல் குழந்தை; ரூ.70,000-த்துக்கு அடமானம்வைத்த காதலர்கள்! - மும்பை சோகம்

இதில் கடும் கோபமடைந்த விவேக், அருகில் இருந்த குழந்தையை எடுத்து கோபத்தில் தரையில் ஓங்கி அடித்துவிட்டார். இதில், குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தது. இது குறித்து விவேக்கின் மனைவி கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் விவேக்கைக் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

கைது
கைது
representational image

இந்தத் தம்பதியருக்கு கடந்த 2018-ம் ஆண்டுதான் திருமணம் நடந்தது. அடிக்கடி குடித்துவிட்டு வந்து, அடித்து உதைத்ததால் விவேக்கின் மனைவி அவரைவிட்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். கடந்த 2019-ம் ஆண்டுதான் மீண்டும் தனது கணவன் வீட்டுக்கு வந்ததாகச் சொல்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு