Published:Updated:

சிறுமிகள் முன் நிர்வாணமாக நின்ற வில்லன் நடிகர் ஸ்ரீஜித் ரவி - போக்ஸோ வழக்கில் கைதுசெய்த போலீஸ்

போக்ஸோ வழக்கில் கைதான நடிகை ஸ்ரீஜித் ரவி

திருச்சூரில் உள்ள எஸ்.என் பூங்காவில் சிறுமிகள் முன் நிர்வாணமாக நின்ற வழக்கில் நடிகர் ஸ்ரீஜித் ரவி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சிறுமிகள் முன் நிர்வாணமாக நின்ற வில்லன் நடிகர் ஸ்ரீஜித் ரவி - போக்ஸோ வழக்கில் கைதுசெய்த போலீஸ்

திருச்சூரில் உள்ள எஸ்.என் பூங்காவில் சிறுமிகள் முன் நிர்வாணமாக நின்ற வழக்கில் நடிகர் ஸ்ரீஜித் ரவி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
போக்ஸோ வழக்கில் கைதான நடிகை ஸ்ரீஜித் ரவி

கேரளாவைச் சேர்ந்த பிரபல வில்லன் நடிகர் ஸ்ரீஜித் ரவி(46). 2005-ல் மயூகம் என்ற மலையாள சினிமா மூலம் நடிப்பு உலகிற்கு அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களில் நடித்திருக்கிறார். பழம்பெரும் மலையாள வில்லன் நடிகரான டி.ஜி.ரவியின் மகனான ஸ்ரீஜித் ரவி கும்கி சினிமாவில் வில்லன் நடிகராக தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். இந்த நிலையில், திருச்சூரில் உள்ள எஸ்.என் பூங்காவில் சிறுமிகள் முன் நிர்வாணமாக நின்ற வழக்கில் நடிகர் ஸ்ரீஜித் ரவி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். திருச்சூர் மேற்கு காவல் நிலையத்தில் ஸ்ரீஜித் ரவிமீது போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டதை அடுத்தே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

நடிகர் ஸ்ரீஜித் ரவி
நடிகர் ஸ்ரீஜித் ரவி

இது குறித்து போலீஸ் தரப்பில், ``திருச்சூர் பூங்காவில் கடந்த 4-ம் தேதி 5 முதல் 11 வயதிலான குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த ஒருவர் குழந்தைகள் முன் நிர்வாணமாக நின்றார். அது பற்றி குழந்தைகளின் பெற்றோர் புகார் அளித்தனர். பூங்காவில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது அதில் வந்தவரின் முகம் தெளிவாக தெரியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், மறுநாளும் கறுப்பு நிற காரில் வந்த ஒருவர் அதே குழந்தைகளை பின் தொடர்ந்து பிளாட்டின் அருகில் உள்ள சந்து பகுதியில் குழந்தைகள் முன் நிர்வாணமாக நின்றிருக்கின்றார். அது நடிகர் ஸ்ரீஜித் ரவி எனத் தெளிவாக தெரியவந்தது. முதல்நாள் குழந்தைகளுக்கு அது யார் என்பது தெரியவந்தாலும், சந்தேகம் இருந்ததால் உறுதி செய்ய முடியவில்லை. தீவிர விசாரணை நடத்திய பின்னரே நடிகர் ஸ்ரீஜித் ரவியை இன்று காலை கைதுசெய்தோம்" என்றனர்.

ஸ்ரீஜித் ரவி
ஸ்ரீஜித் ரவி

போலீஸ் விசாரணையில் நடிகர் ஸ்ரீஜித் ரவி குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தனக்கு ஒரு நோய் இருப்பதாகவும், மருந்து சாப்பிடாததால் அவஸ்தையை அனுபவிப்பதாகவும், அதனால்தான் இப்படி நடந்துகொண்டதாகவும் ஸ்ரீஜித் ரவி போலீஸ் விசாரணையில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து நடிகர் ஸ்ரீஜித் ரவியை திருச்சூர் அடிஷனல் செசன்ஸ் கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

கைது
கைது

போக்சோ வழக்கு என்பதால் கோர்ட்டில் ஜாமீன் வழங்கப்படவில்லை. இதையடுத்து ஸ்ரீஜித் ரவியை 14 நாள்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஸ்ரீஜித் ரவிமீது 2016-ம் ஆண்டும் இதே போன்ற குற்றச்சாட்டு எழுந்தது. பாலக்காடு மாவட்டம், ஒற்றப்பாலம் அருகே உள்ள பத்திரிபால பகுதியில் பள்ளி மாணவிகள் முன்னிலையில் நிர்வாணமாக நின்ற வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.