Published:Updated:

கழுத்தில் இறுக்கப்பட்ட கயிறு; பாலியல் வன்கொடுமை! - பாக்., மாணவிக்கு நேர்ந்த துயரம்

பாகிஸ்தானில் உயிரிழந்த மருத்துவ மாணவி நம்ரிதா சாந்தினி வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது

நம்ரிதா சாந்தினி
நம்ரிதா சாந்தினி

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர் மருத்துவ மாணவர் நம்ரிதா சாந்தினி. பல் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இந்நிலையில், மாணவி தங்கியிருந்த விடுதி அறை வெளிப்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. செப்டம்பர் 16 ம் தேதி மாணவியின் தோழி ஒருவர் விடுதி அறைக்குள் சென்ற போது நம்ரிதா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், மாணவியின் அறையிலிருந்து தூக்க மாத்திரைகள் கண்டெடுத்தனர்.

மரணம்
மரணம்

மாணவியின் மரணம் தொடர்பாக வெளியான மருத்துவ அறிக்கையில் (histopathological examination report)மருத்துவ மாணவி இயற்கைக்கு மாறான காரணங்களால் இறக்கவில்லை அல்லது விஷம் குடிக்கவில்லை. விஷம் அருந்தியிருந்தால் அது அவரது உடல் பாகங்களில் மாற்றங்களைக் காட்டியிருக்கும். அவரது இதயம், சிறுநீரகங்கள், நுரையீரல் மற்றும் கல்லீரலில் அசாதாரண அறிகுறிகள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையைக் கொண்டு போலீஸார் அவர் தற்கொலை செய்துகொண்டார் என முதலில் கூறினர். ஆனால், மாணவியின் பெற்றோர்கள் இதை மறுத்தனர். மேலும், மாணவியின் இறப்புக்கு நீதி வேண்டும் எனப் போராட்டத்திலும் இறங்கினர்.

 `குட் நைட் டார்லிங்...!' - 60 வருட காதல் வாழ்க்கை; நோயால் விபரீத முடிவெடுத்த மூதாட்டி

இதையடுத்து மாணவியின் உடல் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதுதொடர்பாக அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. முந்தைய பிரேத பரிசோதனை அறிக்கையில் பல குளறுபடிகள் நடந்துள்ளதை இந்த அறிக்கையை வெளியிட்ட மருத்துவர் அமிரிதா கூறியுள்ளார். துப்பாட்டாவில் கழுத்து இறுகியது போல் இல்லை; கயிற்றால் இறுக்கப்பட்டுள்ளது. மாணவியின் ஆடையில் ஆண் விந்து இருந்தது டி.என்.ஏ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மரணம்
மரணம்

5 அடி உயரம் கொண்ட ஒரு பெண் 15 அடி உயரம் கொண்ட சீலிங்கில் எப்படி தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த வழக்கில் நீதி விசாரணை கோரி மாணவியின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதை விசாரித்த சிந்து உயர் நீதிமன்றம் வெளிப்படையான விசாரணை வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த வழக்கை லர்கானா மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி மேற்பார்வையிடுகிறார்.