Published:Updated:

காதலுக்கு எதிர்ப்பு: காதலியின் தாயைப் பழிவாங்க 7 மாத குழந்தையைக் கடத்திக் கொன்ற மும்பை தமிழ் வாலிபர்

கைதுசெய்யப்பட்ட கண்ணன்

மும்பையில் தங்களது காதலை ஏற்காத காதலியின் தாயாரைப் பழிவாங்க, அவரின் 7 மாத மகளைக் கொலைசெய்த வாலிபர் கைதுசெய்யப்பட்டார்.

காதலுக்கு எதிர்ப்பு: காதலியின் தாயைப் பழிவாங்க 7 மாத குழந்தையைக் கடத்திக் கொன்ற மும்பை தமிழ் வாலிபர்

மும்பையில் தங்களது காதலை ஏற்காத காதலியின் தாயாரைப் பழிவாங்க, அவரின் 7 மாத மகளைக் கொலைசெய்த வாலிபர் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
கைதுசெய்யப்பட்ட கண்ணன்

மும்பை கோரேகாவ் ஃபிலிம்சிட்டியில் வேலை செய்துவருபவர் கண்ணன் முத்துசாமி (24). இவர் அதே பகுதியில் இருக்கும் மேம்பாலத்துக்குக் கீழே குடிசை அமைத்து வாழ்ந்துவரும் 22 வயது இளம்பெண் ஒருவரைக் காதலித்துவந்தார். அவர்களின் காதலுக்குப் பெண்ணின் தாயார் சம்மதிக்கவில்லை. இதற்காக அந்தப் பெண்ணின் தாயாருடன் கண்ணன் வாக்குவாதமும் செய்தார். ஆனாலும் அவர் சம்மதிக்கவில்லை. இதனால் பெண்ணின் தாயார்மீது கண்ணன் கடும் கோபத்தில் இருந்தார். சம்பவத்தன்று அந்தப் பெண்ணின் தாயார் தனது ஏழு மாத மகளுடன் (காதலியின் தங்கை) வீட்டில் படுத்திருந்தார். அதிகாலையில் அவர் எழுந்து இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றார். வந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை.

கண்ணன்
கண்ணன்

இதனால் அக்கம் பக்கம் தேடிப்பார்த்துவிட்டு இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து குழந்தையைத் தேடிவந்தனர். குழந்தையின் தாயார் வசித்த வீட்டுக்கு அருகில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. எனவே அந்த வீட்டுக்கு அருகில் சம்பவம் நடந்தபோது எந்தெந்த போன் நம்பர்கள் செயல்பாட்டில் இருந்தன என்ற விவரத்தை போலீஸார் சேகரித்தனர். அதோடு புகார் கொடுத்தவரின் வீட்டில் உள்ளவர்கள் போன் நம்பர்களை ஆய்வுசெய்தபோது கண்ணன் பல முறை அங்குள்ள 22 வயது பெண்ணுக்கு போன் செய்து பேசியிருந்தார். உடனே கண்ணனைப் பிடித்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியபோது குழந்தையைக் கடத்தி, கொலைசெய்து தண்ணீர்த் தொட்டி ஒன்றில் போட்டதாகத் தெரிவித்தார். தங்களது காதலுக்குக் குழந்தையின் தாய் அனுமதிக்காததால், அவரைப் பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலையைச் செய்ததாக தெரிவித்துள்ளார். அவரைக் கைதுசெய்து மேற்கொண்டு விசாரித்துவருகின்றனர். கோரேகாவ் ஃபிலிம்சிட்டி இருக்கும் ஆரே காலனி பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism