Published:Updated:

சிறைக்குச் சென்ற நேரத்தில் மனைவிக்கு வேறு ஒருவருடன் திருமணம்! - மாமியாரைக் கொடூரமாகக் கொன்ற நபர்

சித்திரிப்பு படம்
சித்திரிப்பு படம்

மும்பையில் சிறைக்குச் சென்ற நேரத்தில் மனைவியை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்துவைத்த மாமியாரை சித்ரவதை செய்து, கொலை செய்தவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

மும்பை விலேபார்லே பகுதியில் வசிப்பவர் இப்ராகிம் ஷேக். ஷேக்குக்குத் திருமணமான நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு வழக்கு ஒன்றில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு கடந்த ஒன்றாம் தேதிதான் சிறையிலிருந்து வெளியில் வந்தார். அவர் சிறையிலிருந்து வந்தவுடன் நேராக தனது மனைவியைக் காணும் ஆவலில் மாமியார் வீட்டுக்குச் சென்றார். அங்கு சென்றவருக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. அவரின் மனைவி வேறு ஒருவருக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டிருந்தார். அதோடு அவர் புதிய திருமணத்தின் மூலம் கர்ப்பமாக இருந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஷேக், புதிய கணவனை விட்டுவிட்டு தன்னுடன் வரும்படி கூறி மிரட்டிவிட்ச்டு சென்றார்.

சித்திரிப்பு படம்
சித்திரிப்பு படம்

மறுநாள், ஷேக் தனது மனைவியை அழைத்துச் செல்ல வந்தபோது மனைவி அங்கு இல்லை. அவர் அங்கிருந்து தனது இரண்டாவது கணவன் வீட்டுக்குச் சென்றிருந்தார். வீட்டிலிருந்த மாமியாரிடம், தன் மனைவி எங்கே என்று கேட்டு தகராறு செய்தார் ஷேக். ஆனால், அவரின் மனைவி எங்கிருக்கிறார் என்பதைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரத்தில் ஷேக் தன் அத்தையை வீட்டில் கிடந்த டைல்ஸ் கல்லை எடுத்து தலையில் அடித்தார். அதோடு விடாமல் தன்னிடமிருந்த கத்தியால், அத்தையைச் சரமாரியாகக் குத்தியதோடு, அங்கு கிடந்த கம்பை எடுத்து கொடூரமாகச் சித்ரவதை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ஷேக்கைத் தேடி வந்தனர். ஷேக் புனேயில் பதுங்கியிருந்தது அவரின் மொபைல்போன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் புனேயில் ஷேக் கைதுசெய்யப்பட்டு, மும்பைக்கு அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு