Published:Updated:

சென்னை: கடனை அடைக்க கொலை; தப்பிக்க மிளகாய் பொடி; மூதாட்டி மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்!

கொலை
கொலை

சென்னையில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை காசிமேடு காசிமா நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் மைக்கேல் நாயகம் (60). இவரது மனைவி அந்தோணி மேரி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். அவர்களுக்குத் திருமணமாகிவிட்டது. கடந்த சில தினங்களுக்குமுன் மைக்கேல் நாயகம் மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்றார். அந்தோணி மேரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவருக்கு மகன் போன் செய்தபோது எடுக்கவில்லை. அதனால் அந்தோணி மேரியைப் பார்க்க வீட்டுக்கு அவரின் மகன் வந்தார். அங்கு அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் மிளகாய் பொடியும் வீடு முழுவதும் சிதறிக் கிடந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த அந்தோணி மேரியின் மகன் காசிமேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

கொலை
கொலை

உதவி கமிஷனர் உக்கிர பாண்டியன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அந்தோணி மேரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அவரைக் கொலை செய்தது யார் என்று விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சென்னை: இரட்டைக் கொலை; தொட்டிக்குள் சடலங்கள்; தனியாக வசித்த தம்பதியருக்கு நேர்ந்த கொடூரம்!

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `` கொலை செய்யப்பட்ட அந்தோணி மேரி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அவரின் வீடு 3-வது மாடியில்உள்ளது. அதனால் தெரிந்தவர்கள் மட்டுமே வீட்டுக்கு வந்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கினோம். அதன்படி அவரின் வீட்டுக்கு வருபவர்களின் விவரங்களைச் சேகரித்தோம். அப்போது காசி தோட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் (41) என்பவர் அந்தோணி மேரியை சம்பவத்தன்று சந்திக்க வந்தது தெரியவந்தது.

மிளகாய் பொடி
மிளகாய் பொடி

இதையடுத்து அவரை தேடியபோது அலெக்ஸ் தலைமறைவாக இருந்தார்.செல்போன் சிக்னல் மூலம் அவரைப் பிடித்து விசாரித்தோம். அப்போது அவர் அந்தோணி மேரியைக் கொலை செய்தது தெரியவந்தது. அலெக்ஸின் சொந்த ஊர் கேரளா. இவர் அம்மா, மனைவியுடன் காசிமேடு பகுதியில் வசித்து வருகிறார். அந்தோணி மேரியின் கணவர் மைக்கேல் நாயகத்துடன் அலெக்ஸ் மீன் பிடிக்க செல்வார். அதனால் அடிக்கடி அவரின் வீட்டுக்கு வந்துச் செல்வார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரியாக வேலைக்குச் செல்லாத அலெக்ஸ், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியிருந்தார். கடனை கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்தனர். அதன்காரணமாக அலெக்ஸிக்கும் அவரின் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதனால் கணவரிடம் சண்டைப் போட்டுக் கொண்டு அவரின் மனைவி கேரளாவுக்குச் சென்றுவிட்டார். இந்தச் சமயத்தில் பணம் தேவை இருந்ததால் அலெக்ஸ் சிலரிடம் கடன் கேட்டார். ஆனால் யாரும் கொடுக்கவில்லை. அதனால் திருட முடிவு செய்தார். இந்தச் சமயத்தில் அந்தோணி மேரி அணிந்திருக்கும் நகைகளைத் திருட அலெக்ஸ் திட்டமிட்டார். சம்பவத்தன்று மைக்கேல் நாயகம் மீன் பிடிக்க சென்றதால் தனியாக அந்தோணி மேரி இருந்தார். அதனால் அவரின் வீட்டுக்கு அலெக்ஸ் சென்றார்.

 பணம்
பணம்

அந்தோணி மேரிடம் பேசியபடி அவர் அணிந்திருந்த நகைகளைப் பறிக்க முயன்றார். அப்போது அந்தோணி மேரி சத்தம் போட்டார். அதனால் அவரின் கழுத்தை துணியால் அலெக்ஸ் நெரித்தார். அதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்ததும் தங்க நகைகளை எடுத்துக் கொண்டார். பிறகு போலீஸ் மோப்ப நாய், கண்டுபிடிக்காமலிருக்க படத்தில் வரும் காட்சியைப் போல அலெக்ஸ், வீட்டிலிருந்த மிளகாய் பொடியை அந்தோணி மேரியின் மீதும் வீடு முழுவதும் தூவி விட்டு தப்பிச் சென்றார். அதன்பிறகு எதுவும் நடக்காதது போல அமைதியாக இருந்தார். திருடிய நகைகளை ராயபுரத்தில் 1,30,000 ரூபாய்க்கு அடகு வைத்திருக்கிறார். அதில் 40,000 ரூபாயை கேரளாவில் உள்ள மனைவிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். மீதி பணத்தில் கடனை அடைக்க அலெக்ஸ் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் அவரை நாங்கள் கைது செய்துவிட்டோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு