Published:Updated:

கோவை: நகைக்காக மாணவியைக் கொலை செய்த தாயின் நண்பர்... விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

கொலை
News
கொலை

கோவை மாணவி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, அவர்களின் குடும்ப நண்பர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

கோவை சரவணம்பட்டி அருகே 14 வயது மாணவியின் சடலம் கை கால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. கடந்த 11-ம் தேதி மாயமான மாணவியை யார் கொலை செய்தார்கள் என்று போலீஸார் விசாரணை நடத்திவந்தனர்.

மாணவியின் சடலம்
மாணவியின் சடலம்

இது தொடர்பாக மாணவியின் தாய், அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் முத்துக்குமார் ஆகியோரிடம் போலீஸார் நேற்று முதல் தீவிர விசாரணை நடத்திவந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதில் முத்துக்குமார் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியிருக்கிறார். மாணவியின் தாய் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவனைப் பிரிந்துவிட்டார். கட்டட வேலை செய்துவரும் அவருக்கு, இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

கோவை
கோவை

முதல் மகள் வேலைக்கு ச்சென்றுவரும் நிலையில், இரண்டாவது மகள் அருகிலுள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவருகிறார். அவர்தான் மாயமாகியிருந்தார். இதற்கிடையே, மாணவியின் தாய்க்கும் முத்துக்குமாருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால், முத்துக்குமார் அந்தப் பெண்ணுக்குத் தங்கநகைகளைக் கொடுத்திருக்கிறார். அதைத் திருப்பிக் கேட்டபோது, இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அப்போது அந்தப் பெண், நகை தன் மகளிடம் இருப்பதாகவும், அவர் தர மறுக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.

கொலை
கொலை

அதனால், முத்துக்குமார் மாணவியைத் தன் வீட்டுக்கு அழைத்து பேசியிருக்கிறார். நகையைக் கேட்டு தகராறு செய்திருக்கிறார். மாணவி எதிர்ப்பு தெரிவித்ததால் அவரைக் கொலை செய்திருக்கிறார்.

ஆனால், இந்தத் தகவலையெல்லாம் மறைத்துவிட்டு, பெண்ணின் குடும்பத்துடன் சேர்ந்து மாணவியைத் தேடுவதுபோலவும், காவல்துறையில் புகார் அளிக்கவும் முத்துக்குமார் உதவி செய்திருக்கிறார். முத்துக்குமார் மீது ஆதாயக் கொலை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

கைது
கைது

அவரிடமிருந்து 4.25 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது உடற்கூராய்வு முடிவில்தான் தெரியவரும் என்று போலீஸார் கூறுகின்றனர்.