Published:Updated:

ம.பி: `தனது மத நம்பிக்கையைப் பின்பற்ற வற்புறுத்துகிறார்!’ - மனைவியின் புகாரால் கணவன் கைது

கைது
கைது

இந்தச் சட்டத்துக்கு சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பலைகள் வீசிவருவது குறிப்பிடத்தக்கது.

மத்தியப்பிரதேச மாநிலம், தன்பூர் பகுதியில், தனது மத பழக்க வழக்கங்களைத்தான் பின்பற்ற வேண்டும் என கணவன் வற்புறுத்தியதாக மனைவி அளித்த புகாரில் கணவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

ம.பி: `தனது மத நம்பிக்கையைப் பின்பற்ற வற்புறுத்துகிறார்!’ - மனைவியின் புகாரால் கணவன் கைது

இது தொடர்பாக நேற்று (29.11.2020) செய்தியாளர்களிடம் பேசிய தன்பூர் பகுதிக்குட்பட்ட துணை காவல்துறை அதிகாரியான பாரத் துபே, ``இந்து மதத்தைச் சேர்ந்த புகாரளித்த பெண், 2018-ம் ஆண்டு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்திருக்கிறார். திருமணத்திற்கு பின்னர், மத்தியப்பிரதேச மாநிலம், தன்பூரில் இருவரும் வசித்துவந்திருக்கிறார்கள். இந்தநிலையில், தற்போது அந்தப் பெண்ணின் கணவர் அந்தப் பெண்ணையும், அந்தப் பெண்ணின் உறவினர்களையும் இஸ்லாமிய மதத்துக்கு மாற வற்புறுத்தல் செய்வதோடு, உருது மற்றும் அரபு மொழிகளைக் கற்கக் கூறி அழுத்தம் தருவதாக அந்தப் பெண் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் குற்றச்செயலில் ஈடுபட்டிருக்கும் கணவரை மத சுதந்திர சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

‘திருமண நோக்கத்துக்காக மட்டும் மதம் மாறுவது ஏற்கத்தக்கதல்ல’ என்று உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மத சுதந்திர மசோதா விரைவில் அமல்படுத்த அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலம் உட்பட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான கர்நாடகா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மதச் சுதந்திர சட்டம் அமல்படுத்த ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

`மத்தியப் பிரதேச மதச் சுதந்திர மசோதா 2020’  - கேள்வி கேட்பவர்களை மிரட்ட இன்னோர் ஆயுதமா?

இச்சட்டத்திற்கு சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பலைகள் வீசி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு