Published:Updated:

`ரூ.20-க்காக மகன் கண்முன் அடித்தே கொல்லப்பட்ட தந்தை!' - டெல்லி பயங்கரம்

கொலை செய்யப்பட்ட ரூபேஷ்
கொலை செய்யப்பட்ட ரூபேஷ்

டெல்லியில் 20 ரூபாய்க்காக மகன் கண்முன்னால் தந்தை அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் சகோதரர்கள் இருவரை போலீஸார் கைதுசெய்தனர்.

வடக்கு டெல்லியின் புராரி பகுதியில் மனைவி, குழந்தைகளுடன் வசித்துவந்தவர் பூபேஷ் குமார். குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறுவதாக அறியப்படும் அந்தப் பகுதியிலுள்ள சலூன் ஒன்றுக்கு முடி வெட்டுவதற்காக பூபேஷ், தனது 13 வயது மகனுடன் கடந்த வியாழக்கிழமை சென்றிருக்கிறார். முடிவெட்டிய பிறகு சலூன் கடைக்காரர் பூபேஷிடம் 50 ரூபாய் கேட்டிருக்கிறார்.

கொலை
கொலை
Representational Image

அதற்கு, தன்னிடம் 30 ரூபாய் மட்டுமே இருப்பதாகக் கூறியிருக்கிறார் பூபேஷ். மீதமுள்ள 20 ரூபாயை பின்னர் தருவதாக சலூன் கடை நடத்திவரும் சந்தோஷிடம் கூறி 30 ரூபாயையும் கொடுத்திருக்கிறார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த சந்தோஷ், 20 ரூபாயை உடனே தரும்படி கேட்டதாகத் தெரிகிறது. இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது முற்றியிருக்கிறது.

நெல்லை: வெடிகுண்டு வீசி, கழுத்தை அறுத்து இரு பெண்கள் கொடூரக் கொலை! - உறையவைத்த பழிக்குப் பழி சம்பவம்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``வாக்குவாதம் முற்றிய நிலையில், சந்தோஷும் அவருடைய சகோதரர் சரோஜும் சேர்ந்து பிளாஸ்டிக் பைப்பால் பூபேஷைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் பூபேஷின் 13 வயது மகனின் கண்முன்னே அரங்கேறியிருக்கிறது. தனது தந்தையை விட்டுவிடும்படி பூபேஷின் மகன் கெஞ்சியும் சலூன் கடை நடத்திவந்த அந்தச் சகோதரர்கள் விடவில்லை. அவர்கள் தாக்கியதில், படுகாயமடைந்த பூபேஷ், அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார். அங்கு பூபேஷைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தோஷையும் சரோஜையும் கைது செய்திருக்கிறோம்'' என்று தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட ரூபேஷ்
கொலை செய்யப்பட்ட ரூபேஷ்

பூபேஷ் தாக்கப்படுவது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், பூபேஷ் தாக்கப்படுவதைத் தடுக்க அவரது மகன் முயற்சி செய்வதும், ஆனால், அவரைத் தள்ளிவிட்ட பின்னர் தொடர்ந்து பூபேஷைத் தாக்குவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. அந்தச் சமயத்தில் சலூன் கடையில் இருந்த வேறு ஒருவர், தனது மொபைலில் அந்த வீடியோவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. அங்கு மேலும் சிலர் இருந்தநிலையில், பூபேஷுக்கு யாரும் உதவக்கூட முன்வரவில்லை.

அடுத்த கட்டுரைக்கு