Published:Updated:

`கல்லைத் தூக்கிப்போட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த லாரி ஓட்டுநர்!’- திண்டுக்கல்லில் பரபரப்பு #CCTV

ஏடிஎம் இயந்திர அறைக்குள் வந்த வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுப்பதற்கு முற்படுகிறார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை.

ஏடிஎம்
ஏடிஎம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றவர் பணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை காலால் எட்டி உதைத்து கல்லை துக்கி வீசி உடைத்த சம்பவக் காட்சிகள் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏடிஎம்
ஏடிஎம்

வத்தலக்குண்டு - திண்டுக்கல் சாலையில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மற்றொரு பகுதியில் பரிவர்த்தனைக்காக பணம் எடுக்கும் ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஏடிஎம் இயந்திர அறைக்குள் வந்த வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுப்பதற்கு முற்படுகிறார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை.

பலமுறை முயன்று பார்க்கிறார், ஆனால் பணம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாடிக்கையாளர் வசைபாடிவாறு ஏடிஎம் இயந்திரத்தைக் காலால் பல முறை எட்டி உதைத்தார். பிறகும் ஆத்திரம் அடங்காதால் அருகில் இருந்த கல்லை எடுத்து ஏடிஎம் இயந்திரத்தின் மீது வீசி அதை உடைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

காவல் நிலையம்
காவல் நிலையம்

இதனால் அவருக்குப் பின்னால் பணம் எடுக்க வந்த வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவை அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இச்சம்பவம் குறித்து வங்கி மேலாளர் சரண் அளித்த புகாரின்பேரில் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டி நடத்திய விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்தை காலால் எட்டி உதைத்து கல்லை தூக்கி வீசி உடைத்து சம்பவத்தை அரங்கேற்றியவர், சேவுகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணமூர்த்தி என்பது தெரிவந்தது. இதைத்தொடர்ந்து வத்தலக்குண்டு போலீஸார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

கல்லை தூக்கிப்போட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த லாரி ஓட்டுநர்!’ - திண்டுக்கல்லில் பரபரப்பு #CCTV

Posted by Junior Vikatan on Saturday, January 4, 2020