Published:Updated:

சாமி கும்பிடுவதுபோல், கோயிலில் தங்கப்பொட்டுகளைத் திருடிச் சென்ற நபர்! - வெளியான சிசிடிவி காட்சிகள்

தங்கப்பொட்டைத் திருடும் மர்ம நபர்

இந்தக் கோயிலில் இரண்டு தினங்களுக்கு முன்பு காலை 09:15 மணி அளவில், சாமி கும்பிடுவதைப் போன்று நடித்து திருடன் ஒருவன், அம்மன் விக்ரகத்திலிருந்த இரண்டு தங்கப்பொட்டுகளைத் திருடிச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

சாமி கும்பிடுவதுபோல், கோயிலில் தங்கப்பொட்டுகளைத் திருடிச் சென்ற நபர்! - வெளியான சிசிடிவி காட்சிகள்

இந்தக் கோயிலில் இரண்டு தினங்களுக்கு முன்பு காலை 09:15 மணி அளவில், சாமி கும்பிடுவதைப் போன்று நடித்து திருடன் ஒருவன், அம்மன் விக்ரகத்திலிருந்த இரண்டு தங்கப்பொட்டுகளைத் திருடிச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

Published:Updated:
தங்கப்பொட்டைத் திருடும் மர்ம நபர்

கரூரிலுள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், சாமி கும்பிடுவதுபோல் நடித்து, தங்கப்பொட்டுகளைத் திருடி சென்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சியை கோயில் நிர்வாகம் வெளியிட, அது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

பிரகாரத்தைச் சுற்றிவரும் மர்ம நபர்
பிரகாரத்தைச் சுற்றிவரும் மர்ம நபர்

கரூர் மாநகரில், கரூர் டு வாங்கல் சாலையிலிருக்கும் அரசு காலனியில் பிரசித்திபெற்ற மகாபுற்றுக்கண் மாரியம்மன் நவகிரக ஸ்தலம் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில், இந்த ஸ்தலத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு காலை 09:15 மணி அளவில், சாமி கும்பிடுவதைப் போன்று நடித்து, திருடன் ஒருவன் கோயிலுக்குள் நுழைந்து, அம்மன் விக்ரகத்தின் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு தங்கப்பொட்டுகளைத் திருடிச்சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டு சக்கர வாகனத்தில் பேக் அணிந்தபடி வந்த அந்த மர்ம நபர் யார் என்ற அடையாளம் தெரியவில்லை. இந்தத் திருட்டுச் சம்பவம் கோயில் வளாகம், கோயிலின் வெளிப்புறம் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் சிக்கியுள்ளது.

வெங்கமேடு காவல் நிலையம்
வெங்கமேடு காவல் நிலையம்

இந்த வீடியோவை கோயில் நிர்வாகி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வேகமாகப் பரவிவருகிறது. அதோடு, இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து கோயில் தரப்பிலிருந்து வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக வெங்கமேடு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து, தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், சாமி கும்பிடுவதுபோல் நடித்து, அம்மனின் தங்கப்பொட்டுகளைத் திருடிச் சென்ற சம்பவம், அந்தக் கோயில் பக்தர்களை அதிர்ச்சியடையவைத்திருக்கிறது.