Published:Updated:

லிவிங் டுகெதர்: கொல்லப்பட்ட இளம்பெண்; உடலை 35 துண்டுகளாக்கிக் காட்டுப்பகுதியில் வீசிய காதலன்!

அஃப்தாப் அமீன் பூனாவாலா - ஷ்ரத்தா

காதலியைக் கொலைசெய்து, அவருடைய உடலை 35 துண்டுகளாக வெட்டி டெல்லியின் பல பகுதிகளில் வீசிய இளைஞர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

லிவிங் டுகெதர்: கொல்லப்பட்ட இளம்பெண்; உடலை 35 துண்டுகளாக்கிக் காட்டுப்பகுதியில் வீசிய காதலன்!

காதலியைக் கொலைசெய்து, அவருடைய உடலை 35 துண்டுகளாக வெட்டி டெல்லியின் பல பகுதிகளில் வீசிய இளைஞர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
அஃப்தாப் அமீன் பூனாவாலா - ஷ்ரத்தா

மகாராஷ்டிரா மாநிலத்தில் வசிப்பவர் விகாஸ் பால்கர். இவருடைய மகள் ஷ்ரத்தா (Shraddha (26) ). இவர் மும்பையிலுள்ள பன்னாட்டு கால் சென்டரில் பணிபுரிந்துவந்திருக்கிறார். உடன் வேலைசெய்யும் அஃப்தாப் அமீன் பூனாவாலா (Aftab) என்பவருடன் ஷ்ரத்தாவுக்கு அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. அது நாளடைவில் இருவருக்கும் காதலாக மாறியிருக்கிறது. அதனால், இருவரும் அங்கிருந்து வேலையை டெல்லிக்கு மாற்றிக்கொண்டு, லிவிங் டுகெதர் முறையில் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துவந்திருக்கின்றனர்.

அஃப்தாப் அமீன் பூனாவாலா - ஷ்ரத்தா
அஃப்தாப் அமீன் பூனாவாலா - ஷ்ரத்தா
ட்விட்டர்

இவர்களின் லிவிங் டுகெதர் உறவுக்கு ஷ்ரத்தா வீட்டில் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஷ்ரத்தாவிடமிருந்து எந்த அலைபேசி அழைப்பும் வரவில்லை. மேலும், அவருடைய சமூக வலைதளங்களிலும் எந்த அப்டேட்டும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஷ்ரத்தாவின் தந்தை அவரை நேரில் சந்திக்க அவருடைய இல்லத்துக்குச் சென்றிருக்கிறார். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்திருக்கிறது.

அஃப்தாப் அமீன் பூனாவாலா
அஃப்தாப் அமீன் பூனாவாலா
ட்விட்டர்

இந்த நிலையில், அந்தப் பெண்ணின் தந்தை காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அஃப்தாப் அமீன் பூனாவாலாவைக் கைதுசெய்திருக்கின்றனர். அதன் பிறகு, விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இது தொடர்பாக காவல்துறையினர் செய்தியாளர்களிடம், ``அஃப்தாப் அமீன் பூனாவாலா அவருடைய காதலி ஷ்ரத்தாவுடன் லிவிங் டுகெதர் முறையில் வசித்துவந்திருக்கிறார். தன்னைத் திருமணம் செய்யும்படி அடிக்கடி ஷ்ரத்தா, அஃப்தாப் அமீனிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அஃப்தாப் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் சண்டை ஏற்பட்டிருக்கிறது.

அஃப்தாப் அமீன் பூனாவாலா
அஃப்தாப் அமீன் பூனாவாலா
ட்விட்டர்

இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மே 18 அன்று ஷ்ரதாவைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, 35 துண்டுகளக வெட்டியிருக்கிறார். அவரின் உடல் பாகங்களை பதுக்கிவைக்க, புதிய குளிர்சாதனப் பெட்டியை வாங்கியிருக்கிறார். டெல்லி அருகேயுள்ள காட்டுப்பகுதியில், தினமும் இரவு 2 மணிக்கு 18 நாள்கள் சென்று உடல் பாகங்களை வெவ்வேறு இடங்களில் வீசியிருக்கிறார். அந்தப் பெண்ணின் உடல் பாகங்களை நாங்கள் தேடிவருகிறோம். அவரைக் கைதுசெய்து நீதிமன்றக் கண்காணிப்பில் வைத்திருக்கிறோம்" என்றனர்.