Published:Updated:

குமரி: `நாங்கள் உங்களைவிட்டுச் செல்கிறோம்!’ - மனைவி, பிள்ளைகளுக்கு விஷம்... தூக்கில் கணவர்

தற்கொலை செய்துகொண்ட கண்ணன், அவர் மனைவி, குழந்தைகள்
தற்கொலை செய்துகொண்ட கண்ணன், அவர் மனைவி, குழந்தைகள்

விசாரணையில் கண்ணன் எழுதிவைத்த கடிதம் ஒன்று கிடைத்தது. அந்தக் கடிதத்தில், ``அன்புள்ள அம்மாவுக்கு, உன் மகள் சரஸ்வதி மற்றும் உன் தம்பி கண்ணன் எழுதுவது. நாங்கள் உங்களைவிட்டுச் செல்கிறோம்...”

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பட்டகசாலியன்விளை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (43). மரம் கடைசல் செய்யும் பணி செய்துவந்தார். இவருக்கு சரஸ்வதி (37) என்ற மனைவியும், அனுஷ்கா (10) என்ற மகளும், விவாஷ் (4) என்ற மகனும் இருந்தனர். இவர் குடும்பத்துடன் ஈத்தாமொழி அருகேயுள்ள சுண்டபட்டிவிளை பகுதியில் குடும்பத்துடன் வசித்துவந்தார். இந்தநிலையில், தச்சு வேலை பார்த்துவந்த கண்ணன் கடந்த இரண்டு நாள்களாக வேலைக்குச் செல்லவில்லை. இதனால் அவர் வேலை பார்க்கும் கடை ஊழியர் ஒருவர் இன்று சுண்டப்பற்றிவிளையில் அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறார். வீட்டின் கதவு மூடப்படிருந்தது. இதையடுத்து அவர் கதவைத் தட்டியிருக்கிறார். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை. கதவு உட்பக்கமாக மூடப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த கடை ஊழியர், அருகிலுள்ள வீடுகளில் உள்ளவர்களிடம் இதுபற்றிக் கூறியிருக்கிறார்.

கடிதம்
கடிதம்

பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் கண்ணனின் வீடு முன்பு கூடினர். அவர்களும் கதவை பலமாகத் தட்டிப்பார்த்தனர். வீட்டுக்குள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கண்ணனின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இறந்தநிலையில் கிடந்தனர். கண்ணன் கழுத்தில் தூக்கு மாட்டி இறந்தநிலையில் தொங்கிக்கொண்டிருந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கண்ணன் எழுதிவைத்த கடிதம் ஒன்று கிடைத்தது. அந்தக் கடிதத்தில், ``அன்புள்ள அம்மாவுக்கு, உன் மகள் சரஸ்வதி மற்றும் உன் தம்பி கண்ணன் எழுதுவது. நாங்கள் உங்களைவிட்டுச் செல்கிறோம். எங்களை மன்னித்துவிடுங்கள். எங்கள் எல்.ஐ.சி, வங்கிப் பணம் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். எங்கள் கையிலிருக்கும் பணத்தை எங்கள் சாவுச் செலவுக்கு எடுத்துக்கொள்ளவும்.

தற்கொலை செய்துகொண்ட கண்ணன், அவர் மனைவி, குழந்தைகள்
தற்கொலை செய்துகொண்ட கண்ணன், அவர் மனைவி, குழந்தைகள்

காவல்துறைக்கு, எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களது இளைய மகன் விவாஷ் வலிப்பு மற்றும் வயிற்றுப் பிரச்னையால் அவதிப்பட்டான். எங்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நாங்கள் கடும் மன உளைச்சலில் இருந்ததால் இந்த முடிவை எடுத்தோம். எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இப்படிக்கு கண்ணன், சரஸ்வதி கண்ணன்" என அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. கண்ணன், தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு பின்னர் தூக்கு மாட்டி தற்கொலை செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு