Published:Updated:

ம.பி: இருசக்கர வாகன சாவிக்காக ஏற்பட்ட சண்டை - மகனின் கையைக் கோடாரியால் வெட்டிக் கொன்ற தந்தை

கொலை

மத்தியப் பிரதேசத்தில் இருசக்கர வாகன சாவிக்காகச் சண்டை ஏற்பட்டதையடுத்து, தன் மகனின் கையை தந்தை கோடாரியால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ம.பி: இருசக்கர வாகன சாவிக்காக ஏற்பட்ட சண்டை - மகனின் கையைக் கோடாரியால் வெட்டிக் கொன்ற தந்தை

மத்தியப் பிரதேசத்தில் இருசக்கர வாகன சாவிக்காகச் சண்டை ஏற்பட்டதையடுத்து, தன் மகனின் கையை தந்தை கோடாரியால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கொலை

மத்தியப் பிரதேசத்திலுள்ள டாமோவில் இருசக்கர வாகன சாவிக்காக ஏற்பட்ட சண்டை, ஒரு 21 வயது இளைஞரின் உயிரைக் காவு வாங்கியிருக்கிறது.

மோதி பட்டேல் (51) என்பவரின் இளைய மகன் சந்தோஷ் படேல் (2). மோதி பட்டேலும், அவருடைய மூத்த மகன் ராம் கிசானும் (24) வெளியே செல்வதற்காக சந்தோஷ் படேலிடம் இருசக்கர வாகனத்தின் சாவியைக் கேட்டுள்ளனர். சந்தோஷ் சாவியைக் கொடுக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மோதியும் ராம் கிசானும் சேர்ந்து சந்தோஷைக் கடுமையாக தாக்கியுள்ளனர். கடும் கோபமடைந்த மோதி, தன்னுடைய மகனின் இடது கையை கோடாரியால் வெட்டினார். இதனால் அவருடைய கை துண்டானது. என்றாலும் தனது செயலால் பதறிப்போன மோதி துண்டான கை, கோடாரியுடன் அருகிலிருந்த காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார்.

தற்கொலை
தற்கொலை

இந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ந்துபோன அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். மேலும் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த சந்தோஷை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே 21 வயது இளைஞன் சந்தோஷ் ரத்த இழப்பால் உயிரிழந்ததாக போலீஸார் சார்பில் கூறப்படுகிறது. மேலும் மோதி, அவருடைய சகோதரர் ராம் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!