Published:Updated:

திருமணம் மீறிய உறவு: பெண்ணைக் கொன்றுவிட்டு ஃபேஸ்புக் லைவில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

தற்கொலை

திங்களன்று அதிகாலை 3 மணியளவில் ரியா பிஸ்வாஸின்ன் 5 வயது மகன் இடைவிடாமல் அழுதுகொண்டிருந்தான். உடனே அந்தப் பகுதியில் வசிப்பவர்கள், வீட்டுக்குச் சென்று பார்த்தபோது சிறுவனின் அருகில் யாரும் இல்லை.

திருமணம் மீறிய உறவு: பெண்ணைக் கொன்றுவிட்டு ஃபேஸ்புக் லைவில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

திங்களன்று அதிகாலை 3 மணியளவில் ரியா பிஸ்வாஸின்ன் 5 வயது மகன் இடைவிடாமல் அழுதுகொண்டிருந்தான். உடனே அந்தப் பகுதியில் வசிப்பவர்கள், வீட்டுக்குச் சென்று பார்த்தபோது சிறுவனின் அருகில் யாரும் இல்லை.

Published:Updated:
தற்கொலை

மேற்கு வங்க மாநிலம், நாடியாவிலுள்ள சிலிகுரியில் ரோமியோ பிஸ்வாஸ், ரியா பிஸ்வாஸ் என்ற தம்பதி வசித்துவந்தனர். அவர்களுக்கு 5 வயது மகன் இருக்கிறான். இந்த நிலையில், ரோமியோ பிஸ்வாஸ் மனைவிக்கும், கிரண் தேப்நாத் என்ற நபருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்ததாகத் தெரிகிறது. கணவன் ஊரில் இல்லாத நாள்களில் இருவரும் சந்தித்துவந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கிரண் தேப்நாத், ரியாவிடம் தன் கணவனை விட்டு வர வற்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

 ரயில்
ரயில்

இந்த நிலையில், திங்களன்று அதிகாலை 3 மணியளவில் ரியா பிஸ்வாஸின் 5 வயது மகன் இடைவிடாமல் அழுதுகொண்டிருந்தான். உடனே அந்தப் பகுதியில் வசிப்பவர்கள், வீட்டுக்குச் சென்று பார்த்தபோது சிறுவனின் அருகில் யாரும் இல்லை. குளியலறையில், ரியா பிஸ்வாஸ் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்திருக்கிறார். உடனே அக்கம் பக்கத்தினர் இந்தத் தகவலை காவல்துறைக்குத் தெரிவித்திருக்கின்றனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறது. அதே நேரம், ஜல்பைகுரி ரயில் நிலையம் வரை நடந்து சென்ற கிரண் தேப்நாத், ஃபேஸ்புக் லைவ் வீடியோவில், ``நான்தான் ரியாவைக் கொன்றேன். நான் சொல்வதை அவள் கேட்டிருந்தால் அவளைக் கொலைசெய்திருக்க மாட்டேன், நானும் இந்தத் தற்கொலை முடிவை எடுத்திருக்க மாட்டேன். ஆனால், என்னை வேறு வழியின்றி இந்த நிலைக்குத் தள்ளிவிட்டாள்.

கொலை
கொலை

இனி நான் வாழ்வதற்கு எந்தக் காரணமும் இல்லை. நான் வாழ்ந்தால், என் வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும் என பயமாக இருக்கிறது” என்று கூறிக்கொண்டே ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக, சிலிகுரி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.