Published:Updated:

உ.பி: ஓடும் குப்பை லாரியில் `சக்திமான்' ஸ்டைலில் புஷ்-அப்... தவறி விழுந்து காயமடைந்த இளைஞர்!

ஓடும் குப்பை லாரியில் புஷ்-அப் ( ட்விட்டர் )

அதிவேகமாகச் செல்லும் குப்பை லாரியில் இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் புஷ்-அப் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது.

உத்தரப்பிரதேசத்தின் லக்னோ பகுதியில் அதிவேகமாகச் செல்லும் குப்பை லாரியில் இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் புஷ்-அப் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது.

அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் அதிவேகமாகச் செல்லும் குப்பை லாரியின் மேலேயிருந்து புஷ்-அப் எடுக்கிறார். அதன் பின்பு எழுந்து நிற்கும் அவர்... சில விநாடிகளில் கீழே தவறி விழுகிறார். அதனால், அவருக்கு முதுகு, கால் என உடலின் சில பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வைரலாகிவரும் இந்த வீடியோ குறித்து இணையவாசிகள் பலரும், ``ஆபத்தான முறையில் குரங்குச் சேட்டைகள் செய்தால் விளைவு இப்படித்தான் இருக்கும்" எனக் கருத்து தெரிவித்துவருகின்றனர்.