Published:Updated:

பீகார்: இரவில் பெண்ணின் கண்களில் குச்சியைச் சொருகிய நபர் - தீவிர விசாரணையில் காவல்துறை

காவல்துறை

வீட்டின் கதவைத் தட்டிய நபர், அந்தப் பெண்ணைக் கட்டிவைத்து அவரின் கண்ணில் குச்சியைச் சொருகிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

பீகார்: இரவில் பெண்ணின் கண்களில் குச்சியைச் சொருகிய நபர் - தீவிர விசாரணையில் காவல்துறை

வீட்டின் கதவைத் தட்டிய நபர், அந்தப் பெண்ணைக் கட்டிவைத்து அவரின் கண்ணில் குச்சியைச் சொருகிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

Published:Updated:
காவல்துறை

பீகார் மாநிலம், கதிஹார் பகுதியிலுள்ள டக்லா கிராமத்தில் ஒரு தம்பதி தன் 8 வயது மகளுடன் வசித்துவருகின்றனர். கணவர் புலம்பெயர் தொழிலாளி என்பதால் தற்போது டெல்லியில் வேலை செய்துவருகிறார். இந்த நிலையில், தன் 8 வயது மகளுடன் கிராமத்திலுள்ள தனது வீட்டில் அந்தப் பெண் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் கதவைத் தட்டியதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பெண் கதவைத் திறந்தவுடன், எதிர்பாராதவிதமாக 8 வயது சிறுமியை மட்டும் அருகிலிருந்த சணல் காட்டுக்கு இழுத்துச் சென்றிருக்கிறார். செய்வதறியாமல் திகைத்த அந்தப் பெண் கத்திக்கொண்டே அவர் பின்னால் சென்றிருக்கிறார். உடனே அந்த நபர் அந்தப் பெண்ணைக் கட்டிவைத்து அவரின் கண்ணில் குச்சியைச் சொருகிவிட்டு, அந்தச் சிறுமியையும் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

கைது
கைது

கடுமையான ரத்தப்போக்கால் துடித்த பெண்ணின் சத்தம் கேட்டு வந்த கிராமவாசிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து காவல்துறை கூறுகையில்,"பெண்ணின் கண்ணில் குச்சியைச் சொருகிச் சென்ற குற்றவாளி எம்.டி.சமீம் என அடையாளம் காணப்பட்டு கைதுசெய்திருக்கிறோம். இந்தச் சம்பவத்துக்கான காரணத்தைக் கண்டறிய அவரிடம் விசாரணை நடத்திவருகிறோம். இது பாலியல் வன்கொடுமைக்காகச் செய்யப்பட்ட குற்றமா இல்லையா என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை" எனத் தெரிவித்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கதிஹார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவருக்கு மீண்டும் பார்வை கிடைக்குமா என மருத்துவர்களிடம் கேட்டபோது அது பற்றி தற்போது எதுவும் சொல்ல முடியாது எனக் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!