Published:Updated:

காலை உணவு சமைக்கும்போது தகராறு; மனைவி உட்பட 5 பேரைக் குத்திக் கொன்ற நபர்! - அதிர்ச்சி சம்பவம்

கொலை

காலை உணவு சமைப்பதில் ஏற்பட்ட தகராறில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ஒருவர் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காலை உணவு சமைக்கும்போது தகராறு; மனைவி உட்பட 5 பேரைக் குத்திக் கொன்ற நபர்! - அதிர்ச்சி சம்பவம்

காலை உணவு சமைப்பதில் ஏற்பட்ட தகராறில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ஒருவர் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கொலை

நாள்தோறும் கொலை, தற்கொலை எனப் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் செய்திகளைப் பார்க்கிறபோதிலும்கூட, சில கொலைகளுக்கான காரணங்கள் மட்டும், `இதற்காகவெல்லாம் கொலை செய்வார்களா?' என்பதுபோல இருக்கும். சமீபத்தில்கூட, உத்தரப்பிரதேச மாநிலத்தில் தந்தையொருவர், காலை உணவு தாமதமாகக் கொடுத்ததற்காகத் தன் மகளென்றும் பாராமல் குத்திக் கொலைசெய்திருக்கிறார். இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரம்கூட ஆகாத நிலையில் உத்தரகாண்ட்டில், காலை உணவு சமைப்பதில் ஏற்பட்ட தகராறில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ஒருவர் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 கொலை
கொலை

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் மனைவி, தாய் மற்றும் மூன்ரு மகள்கள் என குடும்பத்துடன் வசித்துவருபவர் மகேஷ் திவாரி. 47 வயதாகும் மகேஷ் திவாரி, வேலை எதற்கும் செல்லாமல் இருப்பதாகவும், ஸ்பெயினில் வேலை செய்துவரும் இவரின் மூத்த சகோதரர் உமேஷ்தான் குடும்பச் செலவுக்கு மாதா மாதம் பணம் அனுப்புவதாகவும் கூறப்படுகிறது. மேலும் மகேஷ் திவாரி, மத நம்பிக்கைகளில் அதிக ஈடுபாடுடையவர் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மகேஷ் திவாரி இன்று காலை வீட்டில் ஏதோ பூஜையில் மும்முரமாக இருந்தபோது, அவரின் மனைவி காலை உணவு சமைப்பது தொடர்பாக மகேஷ் திவாரியிடம் ஏதோ உதவி கேட்டிருக்கிறார். அப்போது முதலில் வாக்குவாதமாக ஆரம்பித்த இந்தத் தகராறில் மகேஷ் திவாரி தன்னுடைய மனைவி, மூன்று மகள்கள், மனநலம் பாதிக்கப்பட்ட தாய் என ஐவரையும் கொலைசெய்திருக்கிறார். கொலை செய்தது மட்டுமல்லாமல், தன்னைத் தானே உள்ளே வைத்து வீட்டைப் பூட்டிக்கொண்டார். இது எப்படியோ அக்கம் பக்கத்தினருக்குத் தெரியவர, உடனே போலீஸுக்குத் தகவல் சென்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து சம்பவம் இடத்துக்கு வந்து வீட்டுக்குள் நுழைந்த போலீஸார், மகேஷ் திவாரியைக் கைதுசெய்தனர். மகேஷ் திவாரியும், தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

கைது
கைது

பின்னர் இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய டேராடூன் எஸ்.எஸ்.பி திலீப் சிங் குன்வா, ``இன்று காலை மகேஷ் திவாரி தன்னுடைய மகள்களைப் பள்ளியில் விடவேண்டியிருந்தது. ஆனால், அதற்கு முன்னதாக காலை 7 மணியளவில், வீட்டில் பூஜை ஒன்றில் மகேஷ் திவாரி மிகவும் மும்முரமாக இருந்திருக்கிறார். அப்போது அவரின் மனைவி, காலை உணவு சமைப்பதற்கு காலியான காஸ் சிலிண்டரை மாற்ற, மகேஷ் திவாரியை உதவுமாறு கேட்டிருக்கிறார். வேறொரு காஸ் சிலிண்டரை மாற்றும்போது அதுவும் ஏற்கெனவே காலியாகிவிட்டது எனத் தெரியவர, வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகேஷ் திவாரி கோபத்தில் சமையலறையிலிருந்த கத்தியால், மனைவி, தாய், மூன்று மகள்கள் ஆகியோரைக் கொலைசெய்தார்" எனத் தெரிவித்தார்.