Published:Updated:

ம.பி: இயந்திரம் மூலம் மலக்குடலுக்குள் செலுத்தப்பட்ட காற்று; உயிரிழந்த ஊழியர் - சக ஊழியர் கைது!

கம்ப்ரஸர் மூலம் மலக்குடலுக்குள் காற்று; உயிரிழிந்த ஊழியர்

மத்தியப் பிரதேசத்தில் தூசியைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் கம்ப்ரஸர் மூலம் மலக்குடலுக்குள் காற்றைச் செலுத்தியதால் ஊழியர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம், சத்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் லல்லு சிங் தாக்கூர். இவர் கோல்கவானில் ஒரு மாவு அரைக்கும் மில்லில் வேலை பார்த்துவந்தார். எப்போதும் மாலை வீடு திரும்பும்போது உடலில் ஒட்டியிருக்கும் மாவுதூசியை கம்ப்ரஸர் இயந்திரம் மூலம் சுத்தம் செய்துவிட்டுப் புறப்படுவார்.

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி வேலையை முடித்துவிட்டு எப்போதும்போல உடலைச் சுத்தப்படுத்தியிருக்கிறார். அப்போது முதுகிலிருக்கும் தூசிகளைச் சுத்தப்படுத்த தன்னுடன் வேலை செய்யும் கப்பர் கோல் என்ற 24 வயது இளைஞரை அழைத்திருக்கிறார். இளைஞரும் முதுகில் சுத்தம் செய்யும்போது விளையாட்டாக ஆசனவாய் பகுதிக்கு கம்ப்ரஸரைக் கொண்டுபோயிருக்கிறார்.

மரணம்
மரணம்

அப்போது, கம்பரஸர் மலக்குடலுக்குள் அதிகபடியாகக் காற்றை செலுத்தியதில் சரிந்து விழுந்த லல்லு சிங் தாக்கூரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி லல்லு சிங் தாக்கூர் சமீபத்தில் இறந்துவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறை வழக்கு பதிவுசெய்து கப்பர் கோலை நேற்று கைதுசெய்திருக்கிறது.

மேலும், இது தொடர்பாக காவல்துறை, "மலக்குடலில் காற்று நிரம்பியதால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் சிகிச்சையின்போது இறந்தார். இயற்கைக்கு மாறான மரணமாக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. விசாரணையைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்" எனத் தெரிவித்திருக்கிறது. முதற்கட்ட விசாரணையில் கப்பர் கோல் விளையாட்டாகச் செய்த காரியம் வினையில் முடிந்திருகிறது என்பது தெரியவந்திருக்கிறது.