Published:Updated:

`முன்விரோதம்; பகை?' - நெல்லையில் மனைவி, மகன் கண்முன்னே இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

representational image
representational image

கொலை வழக்கு தொடர்பாக நெல்லை நீதிமன்றத்தில் கையொப்பமிட்டு வரும் முருகானந்தம், இன்று வழக்கம்போல வந்திருக்கிறார்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள பாலாமடை இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். அவரின் மனைவி பிச்சம்மாள். அவர்களுக்கு வளைவி என்ற மகன் உள்ளார். முருகானந்தம் கூலித் தொழில் செய்து வந்தார். 

Vikatan

கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி ராஜவல்லிபுரத்தில் மணல் அள்ளுவது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த பால்துரை என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் முருகானந்தம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கொலை வழக்கு தொடர்பாக நெல்லை நீதிமன்றத்தில் கையொப்பமிட்டு வரும் முருகானந்தம், இன்று வழக்கம்போல வந்திருக்கிறார். அவரின் மனைவிக்கு பல்வலி இருந்ததால் நீதிமன்றத்துக்குச் சென்ற பின்னர் மருத்துவரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். அதனால் மனைவி மற்றும் மகனும் பைக்கில் உடன் வந்திருக்கிறார்கள். 

கொலை செய்யப்பட்ட முருகானந்தம்
கொலை செய்யப்பட்ட முருகானந்தம்

நீதிமன்றத்தில் கையொப்பமிடச் சென்றபோது நீதிமன்ற வாயிலில், கொரோனா பாதிப்பு காரணமாக யாரும் நீதிமன்றத்துக்கு வரவேண்டாம் என அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் அங்கிருந்து மருத்துவரைச் சந்திப்பதற்காக பாளையங்கோட்டை சமாதானபுரம் சென்றுள்ளார்.

`கொடுக்கல் வாங்கல் தகராறு; பழிக்குப் பழி!'- டீ குடிக்க வந்த அ.தி.மு.க பிரமுகருக்கு நேர்ந்த சோகம்

பாளையங்கோட்டை மகளிர் காவல்நிலையத்துக்குப் பின்புறம் உள்ள பல் மருத்துவமனைக்குச் சென்றபோது அவர்களை நோட்டமிட்ட நான்கு பேர் கொண்ட கும்பல், பைக்கில் சென்றுகொண்டிருந்த முருகானந்தம் மீது மோதியுள்ளது. அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். 

கொலை செய்யப்பட்ட இடம்
கொலை செய்யப்பட்ட இடம்

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அந்தக் கும்பல் முருகானந்தத்தை சரமாரியாக வெட்டியுள்ளது. மனைவி மற்றும் மகன் கண் எதிரே நடந்த இந்தக் கொடூரச் சம்பவத்தில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு