Published:Updated:

2 ரூபாய்க்கு வாக்குவாதம்; தலையில் அடித்த நண்பர்!- டயருக்கு காற்று அடைத்த நபருக்கு நேர்ந்த சோகம்

Murder
Murder

சைக்கிள் டயருக்கு காற்று அடைத்ததற்கு 2 ரூபாய் கொடுக்காமல் சென்றவரை கடைக்காரரும், அவரது நண்பரும் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள வலசபகலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுவர்னராஜு. 24 வயதாகும் இவர் ஒரு கட்டட தொழிலாளி. இதற்கிடையே, இன்று சுவர்னராஜு தனது கிராமத்தில் உள்ள சம்பா என்பவரின் சைக்கிள் கடையில் தனது சைக்கிள் டயருக்கு காற்று அடைக்கச் சென்றுள்ளார். டயருக்கு காற்று அடைத்த பின் அதற்காக ரூ.2 தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், கடை உரிமையாளர் சம்பாவுக்கு, சுவர்னராஜுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சுவர்னராஜு கடை உரிமையாளர் சம்பாவை தாக்க தொடங்கியுள்ளார்.

Crime
Crime

இந்தச் சம்பவத்தின்போது கடையில் இருந்த சம்பாவின் நண்பர் அப்பா ராவ் அருகிலிருந்த இரும்பு கம்பியை எடுத்து சுவர்னராஜு தலையில் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுவர்னராஜு சரிந்து விழுந்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை அருகில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சுவர்னராஜு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். சம்பா மற்றும் அப்பா ராவ் தலைமறைவாகியுள்ளதால் அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு