Published:Updated:

`காவலருக்கு அரிவாள் வெட்டு; போலீஸ் பிடியிலிருந்து தப்பிய நபர் தற்கொலை!’ - தஞ்சையில் அதிர்ச்சி

தூக்கு தண்டனை குற்றவாளிகள் 6 பேர் கருணை மனு நிராகரிப்பு!
தூக்கு தண்டனை குற்றவாளிகள் 6 பேர் கருணை மனு நிராகரிப்பு!

மணி, அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்த போலீஸார், அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தஞ்சாவூரில், வழிப்பறி வழக்கு ஒன்றில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் கைதுசெய்யச் சென்றனர். அப்போது, ஒருவரை பிடித்துடன், மற்றொருவரைப் பிடித்து வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது அவர், மறைத்துவைத்திருந்த அரிவாளால் போலீஸ் ஒருவரை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். சில மணி நேரங்களுக்குப் பிறகு, போலீஸை வெட்டிய நபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட மணி
தற்கொலை செய்து கொண்ட மணி

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிந்துவருபவர்கள் மணிமாறன் (52), சுதா (47) தம்பதி. இவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு, தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி-பள்ளிஅக்ரஹாரம் புறவழிச்சாலையில் வண்ணாரப்பேட்டை பகுதிக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது காரை விட்டு இறங்கி பாலத்தின்மீது நின்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

இந்த நிலையில், மர்ம நபர்கள் 3 பேர் டாக்டர் தம்பதியை பாலத்திற்கு கீழே இழுத்துச்சென்று பீர் பாட்டிலால் தாக்கியதுடன், சுதா கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின் மற்றும் மணிமாறன் கையில் இருந்த கைச் செயின் உள்ளிட்ட, சுமார் 11 பவுன் நகை மற்றும் 1.25 லட்சம் பணத்தையும் பறித்துச் சென்றுவிட்டனர். இதையடுத்து, டாக்டர் தம்பதியர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இதேபோல், வயதான பெண்மணி ஒருவரிடமும் அந்தக் கும்பல் நகைகளைப் பறித்ததாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து வல்லம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவந்ததுடன், குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.

பகுதி மக்கள்
பகுதி மக்கள்

இந்த நிலையில், இன்று இந்தச் சம்பவம் தொடர்பாக மானோஜிப்பட்டியில் உள்ள சிலரைப் பிடித்து விசாரிப்பதற்காக தனிப்படை போலீஸார் சென்றுள்ளனர். அப்பகுதியிலிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கணாபாளையத்தைச் சேர்ந்த செல்வம் (48) என்பவரைப் பிடித்ததுடன், மானோஜிப்பட்டியைச் சேர்ந்த ரவுடி மணி என்பவரையும் பிடித்து வேனில் ஏற்ற முயன்றுள்ளனர்.

அப்போது மணி, மறைத்துவைத்திருந்த சிறிய அரிவாளை எடுத்து சிறப்பு காவலரான கெளதமன் காலில் வெட்டியுள்ளார். இதனால் சக போலீஸார் அதிர்ச்சியடைய, உடனே மணி அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். வெட்டுப்பட்ட போலீஸான கெளதமன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தப்பி ஓடிய மணியை போலீஸார் தேடி வந்தனர்.

சிகிச்சையில் கெளதமன்
சிகிச்சையில் கெளதமன்

இந்த நிலையில், மணி அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்த போலீஸார், அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால், மணியின் குடும்பத்தினர் `மணி தூக்கு போட்டு இறந்திருக்க வாய்ப்பில்லை; மணி மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. அவரது கால்கள் தரையிலேயே உள்ளது. எப்படி அவரால் தூக்கு போட முடியும்’ என போலீஸார் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு