Published:Updated:

`பூர்வீக சொத்தை எழுதிக் கொடுக்க மறுத்த தாய்...' - குடிபோதையில் மகனால் நேர்ந்த கொடூரம்

representational image
representational image

தாயின் பெயரில் இருக்கும் வீட்டை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு மகன் ராஜன் தொடர்ந்து வலியுறுத்திவந்துள்ளார்.

நெல்லை மாவட்டம் செட்டிகுளம் மேலத்தெருவைச் சேர்ந்தவர், ஜெயமணி. 62 வயது மூதாட்டியான ஜெயமணிக்கு ஒரு மகனும் நான்கு மகள்களும் உள்ளனர். மூன்று மகள்களுக்குத் திருமணமாகி விட்டது. அதனால் செட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் கடைசி மகளுடன் ஜெயமணி வசித்துவந்தார். 

2 க்ளு... சிசிடிவி காட்சி; தண்ணீர்த் தடயம்!- நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கின் விறுவிறு சேஸிங்

டெய்லர் வேலை செய்துவந்த மகன் ராஜனுக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். அதனால் அவர் செட்டிகுளம் அருகில் உள்ள ஐயப்பன் நகரில் குடும்பத்துடன் வசித்துவந்தார். தங்களது பூர்வீக வீட்டை தன் பெயருக்கு எழுதித் தருமாறு ராஜன் தன் தாயை தொடர்ந்து கேட்டுவந்துள்ளார்.

குடும்பச் சொத்தை மகள்களுக்கும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என ஜெயமணி நினைத்திருக்கிறார். இதுதொடர்பாக மகன் ராஜனுடன் தகராறு இருந்துவந்திருக்கிறது. இந்த நிலையில், 40 நாள்களுக்குப் பின்னர் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் ராஜன் மது குடித்திருக்கிறார். 

ராஜன்
ராஜன்

போதை தலைக்கேறிய நிலையில், தாய் ஜெயமணியைச் சந்தித்து வீட்டை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு சண்டையிட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதனால் ஆத்திரம் அடைந்த ராஜன், மறைத்துவைத்திருந்த அறிவாளை எடுத்து தாயை வெட்டியிருக்கிறார். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

`இழுத்து மூடு’ போராட்டம்... போதையில் உயிரிழந்த நபர்...- டாஸ்மாக் களேபரங்கள் #LiveUpdates

தாயை, தன் சகோதரனே வெட்டிக் கொன்றதைப் பார்த்து சகோதரி அலறித் துடித்திருக்கிறார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் வந்து பார்த்தபோது, ஜெயமணி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக கூடங்குளம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விசாரணை நடத்திய போலீஸார்
விசாரணை நடத்திய போலீஸார்

சம்பவ இடத்துக்கு வந்த கூடங்குளம் போலீஸார், ஜெயமணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பெற்ற தாயை, மகனே குடிபோதையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு