Published:Updated:

`மனைவியுடனான தகராறால் 3 வயது மகளைக் கொன்ற கணவன்; மகனையும் கொல்ல முயற்சி!' - மயிலாடி அதிர்ச்சி

மனைவி மகளுடன் செந்தில்குமார்
மனைவி மகளுடன் செந்தில்குமார்

மகனைக் கொலை செய்ய முயன்ற செந்தில்குமார், பின்னர் வீட்டுக்கு வந்து தனது மகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துக் கொலை செய்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகேயுள்ள மார்த்தாண்டபுரத்தைச் சேர்ந்த செந்தில் குமார் (35), மயிலாடி பஞ்சாயத்தில் தண்ணீர் திறந்துவிடும் வேலை செய்துவருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி என்ற முகேஸ்வரி. இவர்களுக்கு சியாம் சுந்தர் (6) என்ற மகனும், சஞ்சனா (3) என்ற மகளும் இருந்தனர். செந்தில்குமார், தனது பெற்றோரின் வீட்டுக்கு அருகிலேயே வீடு வாடகைக்கு எடுத்து, தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். அதேபோல், ஏலச்சீட்டும் நடத்திவந்துள்ளார். அதற்காக, மனைவியின் நகைகளை சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்திருக்கிறார், செந்தில்குமார்.

இந்த நிலையில், சித்தி மகளின் திருமணத்திற்குப் போக வேண்டும் என்பதால், நகைகளை மீட்டுத் தரும்படி ராமலட்சுமி தன் கணவர் செந்தில்குமாரிடம் நேற்று காலை கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கோபத்தில், தன் மூன்று வயது மகளைக் கொலை செய்தும், மகனின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்ய முயற்சியும் செய்துள்ளார்.

தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட குழந்தை சஞ்சனா
தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட குழந்தை சஞ்சனா

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ``மனைவியிடம் தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, செந்தில்குமார் வேலைக்குச் சென்றுவிட்டார். திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், ராமலட்சுமி குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பவில்லை. இந்த நிலையில், மாலையில் மனைவிக்குத் தெரியாமல வீட்டுக்கு வந்த செந்தில்குமார், தனது பெற்றோர் வீட்டுக்குள் மகன் சியாம் சுந்தரை அழைத்துச் சென்றுள்ளார். பெற்றோர் வீட்டில் யாரும் இல்லை. அங்கு வைத்து ஸ்கிப்பிங் விளையாடும் கயிற்றால் மகனின் கழுத்தைச் சுற்றி இறுக்கியுள்ளார். அவன் கீழே சரிந்து விழுந்ததும் இறந்துவிட்டதாக நினைத்து வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் மகனைத் தேடியுள்ளார் ராமலட்சுமி. தனது கணவரின் பெற்றோர் வீட்டில் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டதால், பதறிப்போய் அங்கு சென்றிருக்கிறார் ராமலட்சுமி. மகன் உயிருக்குப் போராடுவதைக் கண்டு, உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மகனை சிகிச்சைக்கு சேர்த்த ராமலட்சுமி, கணவன் செந்தில்குமாருக்கு போன் செய்துள்ளார். கணவன் போனை எடுக்கவில்லை. இதையடுத்து, அவரது வீட்டின் அருகில் உள்ள அழகேசன் என்பவருக்கு போன்செய்து, `மகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டேன். அவளைப் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று கூறியிருக்கிறார்.

மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் சிறுவன் சியாம் சுந்தர்
மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் சிறுவன் சியாம் சுந்தர்

அழகேசன், உடனடியாக செந்தில்குமாரின் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அவர்களது வீட்டின் முன்கதவும் பின்கதவும் பூட்டிக்கிடந்துள்ளன. இதனால் பின்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு ராமலட்சுமியின் மகள், தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து ,குழந்தையை மயிலாடியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

``மகள்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு மகன்?" - கூலிப்படை மூலம் கொலை செய்த சென்னைத் தாய்

மகனைக் கொலை செய்ய முயன்ற செந்தில்குமார், பின்னர் வீட்டுக்குவந்து தன் மகளை தண்ணீர்த்தொட்டியில் மூழ்கடித்துக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது, மகன் சியாம் சுந்தரை அழைத்துக்கொண்டு செந்தில்குமர் வீட்டுக்குள் போவதும், பின்னர் அரை மணி நேரம் கழித்து தனியாக வெளியே வருவதும் பதிவாகி உள்ளது. இதுகுறித்து ராமலட்சுமி புகார் அளித்துள்ளார். செந்தில்குமார் தலைமறைவான நிலையில், அவரைத் தேடிவருகிறோம்" என்றனர்.

பின் செல்ல