Published:Updated:

உ. பி: ஒரு வாரத்தில் திருமணம்... உணவு வழங்குவதில் தாமதம் - சொந்த மகளையே கொலை செய்த தந்தை!

கொலை

உத்தரப்பிரதேசத்தில் தனது மகள் சரியான நேரத்தில் உணவு வழங்கத் தவறியதால் ஆத்திரமடைந்த தந்தை, மகளைக் கொலை செய்திருக்கிற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஹப்பூர் மாவட்டத்தின் பாபுகர் பகுதியில் வசித்துவருபவர் முகமது ஃபரியாத். இவருக்கு ஆறு குழந்தைகள். தன் இரண்டாவது மகளான ரேஷ்மா என்பவர் சரியான நேரத்தில் உணவு வழங்காததால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் மோதலாக மாறியிருக்கிறது. கோபத்தில் புல் வெட்டப் பயன்படும் கூர்மையான கத்தியை எடுத்து தன் மகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ரேஷ்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரு வாரத்தில், அதாவது செப்டம்பர் 4-ம் தேதி ரேஷ்மாவுக்குத் திருமணம் நடைபெறவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கைது
கைது

மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்துக்குப் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், அந்தப் பெண்ணின் தந்தையைக் கைதுசெய்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகேஷ் சந்திரா கூறுகையில், "பாபுகர் காவல் நிலையத்தில் ஐபிசி 302 (கொலை) பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தப் பெண்ணின் சடலமும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. விசாரணை நடைபெற்றுவருகிறது’’ என்றார்.