Published:Updated:

``அவளுக்குப் பிடித்த பாடலை இசைத்துக்கொண்டிருந்தேன்" - மனைவியைக் கொலைசெய்தவரின் அதிர்ச்சி வாக்குமூலம்

கொலை செய்தவர் அதிர்ச்சி வாக்குமூலம்!

``அவள் ரத்த வெள்ளத்தில் ஊர்ந்து செல்ல முயன்றாள். அதனால் அவளைத் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துக் கொலைசெய்துவிட்டேன்.” - அதிர்ச்சி வாக்குமூலம்

``அவளுக்குப் பிடித்த பாடலை இசைத்துக்கொண்டிருந்தேன்" - மனைவியைக் கொலைசெய்தவரின் அதிர்ச்சி வாக்குமூலம்

``அவள் ரத்த வெள்ளத்தில் ஊர்ந்து செல்ல முயன்றாள். அதனால் அவளைத் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துக் கொலைசெய்துவிட்டேன்.” - அதிர்ச்சி வாக்குமூலம்

Published:Updated:
கொலை செய்தவர் அதிர்ச்சி வாக்குமூலம்!

லண்டனில் சார்ட்டர் பாயின்ட் குடியிருப்பில் சிச்சென் யாங் (21) என்பவர் தன் மனைவி Nhu Quynh Pham-வுடன் வாழ்ந்துவந்தார். இந்த நிலையில், கடந்த செவ்வாயன்று சிச்சென் யாங் தன் மனைவியைக் கொலைசெய்துவிட்டதாக Altamonte Springs காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்துது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை விசாரித்ததில் சிச்சென் யாங் தன் மனைவியைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, காவல்துறையின் பரிசோதனையில், சிச்சென் யாங்-கின் மனைவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், குளியல் தொட்டியில் மூழ்கடிக்கப்பட்டு இறந்துகிடந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிச்சென் யாங் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், "என் மனைவி வெளியில் சொல்ல முடியாத குற்றத்தைச் செய்துவிட்டார். அதனால் கழுத்தறுத்து கொலை செய்ய முயன்றேன். ஆனால் அவள் ரத்த வெள்ளத்தில் ஊர்ந்து செல்ல முயன்றாள். அதனால் அவளைத் தண்ணீர்த்தொட்டியில் மூழ்கடித்துக் கொலைசெய்துவிட்டேன்.

காவல்துறை
காவல்துறை

ஆனால், அவள் இறக்கும்போது அவளுக்காக அவளுக்குப் பிடித்த பாடலை, அவள் கைகளைப் பிடித்துக்கொண்டே இசைத்துக்கொண்டிருந்தேன். அவள் மெதுவாக இறந்துபோனாள்" எனத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக காவல்துறை தரப்பு, "சிச்சென் யாங் வேலை செய்துகொண்ருக்கும் நிறுவனத்தில் முதலாளி அவர் வேலைக்கு வராததால் தொலைபேசியில் அழைத்திருக்கிறார்.

அதற்கு பதிலளிக்காதபோது நேரில் வந்து பார்த்திருக்கிறார். அதற்குப் பிறகே காவல்துறைக்குத் தகவலளித்திருக்கிறார். சிச்சென் யாங்-மனைவி அவருடைய பாஸ்போர்ட்டை எரித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அவர்மீது சிச்சென் யாங் கோபமாக இருந்ததாகத் தெரிகிறது. மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" எனக் கூறியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!