Published:Updated:

நெல்லை: மாடு மேய்க்கும் தொழிலாளியைக் கொலைசெய்யக் காரணம் என்ன? - 8 பேரைப் பிடித்து போலீஸ் விசாரணை

கொலைசெய்யப்பட்ட மாயாண்டி

மாடு மேய்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவரை வழிமறித்த கும்பல் கொலைசெய்துவிட்டுத் தப்பியோடியது. இதன் பின்னணியில் இருக்கும் கும்பலைப் பிடிக்கும்வரை உடலை வாங்குவதில்லை என உறவினர்கள் தகவல்.

நெல்லை: மாடு மேய்க்கும் தொழிலாளியைக் கொலைசெய்யக் காரணம் என்ன? - 8 பேரைப் பிடித்து போலீஸ் விசாரணை

மாடு மேய்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவரை வழிமறித்த கும்பல் கொலைசெய்துவிட்டுத் தப்பியோடியது. இதன் பின்னணியில் இருக்கும் கும்பலைப் பிடிக்கும்வரை உடலை வாங்குவதில்லை என உறவினர்கள் தகவல்.

Published:Updated:
கொலைசெய்யப்பட்ட மாயாண்டி

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகக் கொலை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் குறைந்திருந்த நிலையில், மீண்டும் தலைதூக்கத் தொடங்கியிருக்கின்றன. நெல்லையை அடுத்த சீவலப்பேரி கிராமத்தில் மாயாண்டி என்பவர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம் நீடிக்கிறது. அந்த கிராமத்திலுள்ள ஒத்தப்பனை சுடலை கோயிலின் பூசாரியாக இருந்த துரை என்ற சிதம்பரம் கடந்த ஆண்டு, ஏப்ரல் 18-ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார்.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

கோயிலை நிர்வகிப்பது தொடர்பாகவும், அங்குள்ள கடைகளை ஏலத்தில் எடுப்பது தொடர்பாகவும் கிராமத்திலுள்ள இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிதம்பரம் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் தற்போது ஜாமீனில் வந்துள்ளனர். அந்த வழக்கு விசாரணை நடந்துவரும் நிலையில் தற்போது மாயாண்டி கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.

மாயாண்டி கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “கோயில் பூசாரியான துரை என்ற சிதம்பரம் கொல்லப்பட்டதும் அந்தப் பகுதியில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாவட்ட எஸ்.பி-யான சரவணன் ஆகியோர் இரு தரப்பினரை அழைத்து சமரசப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார்கள். அதைத் தொடர்ந்து சுமுக நிலைமை நீடித்தது.

பாதுகாப்புப் பணியில் போலீஸார்
பாதுகாப்புப் பணியில் போலீஸார்

இந்த நிலையில், கோயில் பூசாரி கொலை வழக்கு தொடர்பான விசாரணை நடந்துவரும் நிலையில், அந்த வழக்கின் முக்கிய சாட்சி ஒருவரின் உறவினரான மாயாண்டி கொல்லப்பட்டிருக்கிறார். ஆடு, மாடுகளை மேய்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தவரை வழிமறித்து கொலைசெய்துள்ளனர். சாட்சிகளை மிரட்டும் நோக்கத்தில் இந்தக் கொலை நடந்திருப்பதாகச் சந்தேகிக்கிறோம்” என்றார்கள்.

இதற்கிடையே, மாயாண்டி கொலை தொடர்பாக எட்டு பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். அவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுவனும் இருக்கிறார். அந்தச் சிறுவனுக்கும் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கொலையாளிகளைப் பிடித்தால் மட்டுமே மாயாண்டி உடலை வாங்குவோம் என உறவினர்கள் தெரிவித்ததால் பதற்றம் நீடிக்கிறது. அதனால் கொலை நடந்த சீவலப்பேரி கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.