Published:Updated:

திருமணம் மீறிய உறவு; சமூக வலைதளத்தில் தாலிகட்டிய போட்டோ! - இளம்பெண் கொலையில் நடந்தது என்ன?

கேரள இளம்பெண் கொலை

தன்னையும் தமிழ்நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என கங்கா அடம்பிடித்துள்ளார். அது பற்றிப் பேசலாம் என கங்காவை திருவனந்தபுரம் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார் பிரவீன். ரூமில்வைத்து கங்காவைக் கொலைசெய்துள்ளார்.

திருமணம் மீறிய உறவு; சமூக வலைதளத்தில் தாலிகட்டிய போட்டோ! - இளம்பெண் கொலையில் நடந்தது என்ன?

தன்னையும் தமிழ்நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என கங்கா அடம்பிடித்துள்ளார். அது பற்றிப் பேசலாம் என கங்காவை திருவனந்தபுரம் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார் பிரவீன். ரூமில்வைத்து கங்காவைக் கொலைசெய்துள்ளார்.

Published:Updated:
கேரள இளம்பெண் கொலை

கேரளா மாநிலம், கொல்லம் பரவூரைச் சேர்ந்தவர் பிரவீன் (28). இவர், திருவனந்தபுரத்தில் ஒரு பிரபல நகைக்கடையில் டிரைவராக வேலை செய்துவந்தார். பிரவீனுக்கு திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளனர். பிரவீன் வேலை செய்த நகைக்கடையில் திருவனந்தபுரம் காட்டாக்கடையைச் சேர்ந்த கங்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணும் வேலை செய்துவந்திருக்கிறார். பிரவீனுக்கும் கங்காவுக்கும் நட்பு ஏற்பட்டு, பின்னர் இருவரும் நெருங்கிப் பழகினர். பிரவீனின் மனைவிக்கு இது தெரியவரவே நகைக்கடை நிர்வாகத்துக்கும், கங்காவின் வீட்டுக்கும் தகவல் சொன்னதுடன் பரவூர் காவல் நிலையத்தில் பிரவீன் மீது புகார் அளித்துள்ளார்.

புகாரை அடுத்து நகைக்கடை நிர்வாகம் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு கங்காவை வேலையிலிருந்து நீக்கியது. கடந்த மாதத்தில் பிரவீனை தமிழ்நாட்டிலுள்ள கிளைக்கு இடமாற்றம் செய்தது.

தாலிகட்டும் புகைப்படம்
தாலிகட்டும் புகைப்படம்

இந்த நிலையில் பிரவீன், கங்காவை அழைத்துக்கொண்டு கடந்த சனிக்கிழமை திருவனந்தபுரம் தம்பானூரில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்துள்ளார். சனிக்கிழமை மாலையில் திடீரென அறையைவிட்டு வெளியேறியிருக்கிறார் பிரவீன். பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் ஓட்டல் ரிஷப்ஷனுக்கு போன் செய்து 107-ம் எண் அறையில் கங்கா இறந்துகிடப்பதாக தகவல் சொல்லிவிட்டு போனை துண்டித்திருக்கிறார். ஊழியர்கள் அந்த அறைக்குச் சென்று பார்த்தபோது வெளிப்பக்கமாக பூட்டியிருந்ததால், தம்பானூர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் ஓட்டலுக்குச் சென்று இறந்துகிடந்த கங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் பிரவீன், கொல்லம் பறவூர் போலீஸ் ஸ்டேஷனில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தார். இதற்கிடையே கங்காவுக்கு பிரவீன் தாலிகட்டுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகின. இதையடுத்து பிரவீனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரவீனிடம் நடந்த விசாரணை குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "பிரவீனும் கங்காவும் நெருங்கிப் பழகிவந்த நிலையில், கங்காவுக்கு அடிக்கடி சந்தேகம் வந்துள்ளது. கங்காவின் சந்தேகத்தைப் போக்க 2021, பிப்ரவரி மாதம் திருவனந்தபுரத்தில் ஒரு சர்ச்சில்வைத்து அவருக்கு தாலிகட்டியுள்ளார் பிரவீன். தாலிகட்டியது சம்பந்தமான புகைப்படங்களை இருவரும் செல்போனில் பத்திரமாக வைத்துள்ளனர். பின்னர் பிரவீன் தமிழ்நாட்டிலுள்ள கிளைக்கு வேலைக்குச் செல்வதை அறிந்த கங்கா, தன்னையும் தமிழ்நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என அடம்பிடித்துள்ளார். அதுபற்றிப் பேசலாம் என திருவனந்தபுரம் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் பிரவீன். ரூமில் வைத்து தமிழ்நாட்டுக்கு அழைத்துச் செல்ல மாட்டேன் என பிரவீன் சொல்லியிருக்கிறார்.

பிரவீன் - கங்கா
பிரவீன் - கங்கா

பிரவீன் தன்னை ஏமாற்றுவதாக உணர்ந்த கங்கா, தங்கள் திருமண போட்டோ உள்ளிட்டவற்றை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்ததுடன், சமூக வலைதள பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் துப்பட்டாவால் கங்காவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அவரது செல்போனையும் எடுத்துக்கொண்டு ஹோட்டலிலிருந்து வெளியேறினார். பின்னர் கங்காவின் போனிலிருந்து ஹோட்டலுக்கு போன் செய்து தகவல் சொல்லியிருக்கிறார். இந்த வழக்கு பற்றித் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

இந்த நிலையில் கங்கா காணாமல் போனதால் அவரின் செல்போனுக்கு, அவரின் தாய் போன் செய்திருக்கிறார். அப்போது பிரவீன் போனை எடுத்துப் பேசியதாகவும், மகளிடம் போனை கொடுக்கவில்லை எனவும் தாய் சுஜாதா கூறியுள்ளார். இது பற்றி போலீஸ் விசாரணையில் தாய் சுஜாதா கூறுகையில், "கொலை நடந்த அன்று கங்காவுக்கு நான் போன் செய்தபோது பிரவீன் போனை எடுத்துப் பேசினார்.

மகளிடம் போனைக் கொடுக்கும்படி கூறிய பிறகு 'நான் அவளது கணவன்' எனக் கூறி போனைக் கொடுக்க மறுத்துவிட்டார். கங்காவைத் தொந்தரவு செய்யக் கூடாது என நான் பலமுறை கூறினேன். ஆனால், தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாகப் பொய் சொல்லி பழகிவிட்டு, இப்படிச் செய்துவிட்டான்" எனக் கூறியுள்ளார்.

திருமணம் மீறிய உறவு இறுதியில் கொலையாக முடிந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.